Essayகட்டுரை

Velu Nachiyar katturai – வீர மங்கை வேலுநாச்சியார்

வீர மங்கை வேலுநாச்சியார் :- 

ஆங்கிலேயரை எதிர்த்து பதினேழாம் நூற்றாண்டிலேயே போர்தொடுத்தவர் வீரமங்கை வேலுநாச்சியார் ஆவர் .தமிழகத்தின் சிவகங்கையின் அரசியான இவர் இந்திய வரலாற்றில் முதல் தற்கொலை படை அமைத்தவர் என்ற புகழ் பெற்றவர்.

1730 இல் ராஜா செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதிக்கும் சக்கந்தி முத்தாத்தாளுக்கும் மகளாக பிறந்து பின்னாளில் சிவகங்கையை ஆண்ட முத்துவடுக நாதருக்கு மனைவியாக இருந்த வேலுநாச்சியார்.

இதையும் படிங்க
Velu Nachiyar katturai – வீர மங்கை வேலுநாச்சியார்
Velu Nachiyar katturai – வீர மங்கை வேலுநாச்சியார்

ஆற்காடு நவாப் மகனுடன் இணைந்து ஆங்கிலேய அரசு புகழ் பெற்ற காளையர் கோவில் போரில் அரசரை கொன்று சிவகங்கையை கைப்பற்றியது.தனது கணவரான சிவகங்கை மன்னர் மறைவுக்கு பின்னர் ராணியாக தன்னை பிரகடப்படுத்தி கொண்டார்.பண்டைய கால கட்டங்களில் ஆங்கிலேய அரசின் பிரித்தாளும் கொள்கையை முற்றிலும் முறியடித்தனர் வேலுநாச்சியார் ஆவர்.

ஆண் வாரிசு இல்லது அரசுகள் கம்பெனி வசம் ஒப்படைக்க வேண்டும் என ஆங்கிலேய அரசு சட்டம் இயற்றியது .இதன் காரணமாக தனது மகளை பாதுகாப்பதுடன் சிவகங்கை அரசையும் காக்கும் முயற்சியை ஆரம்பித்தார் வேலுநாச்சியார் .திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் விட்டு இடம் நகர்ந்து தனது மகளையும் காக்க ஆரம்பித்தார் .அத்துடன் ஆங்கிலேய அரசுக்கு எதிராக பொருக்கும் தயாரானார் வேலு நாச்சியார்.பிந்தைய காலங்களில் சிவகங்கையின் ஆட்சி அதிகாரம் மகள் வெள்ளச்சி நாச்சியார் வசம் பிறகு அவர் இறந்து போன பின்னர் அவர் கணவர் கௌரி வல்லப உடைய தேவர் ஆட்சியில் மருது சகோதர்கள் தலைமையில் சிறப்பாக ஆட்சி நடத்தினர்

வீரம் மிகுந்த தமிழ் அரசர்கள் ஆங்கிலேய அரசுடன் நேருக்கு நேர் மோதினாலும் அண்டை அரசருடன் இணைந்து போரிட மறுத்தது ஆங்கிலேயர் ஆட்சி அமைக்க எதுவாக இருந்தது என்பது வரலாறு .ஆனால் ஆங்கிலேயரை நாட்டை விட்டே துரத்தும் நோக்குடன் செயல்பட்ட வேலு நாச்சியார் எவருடனும் கைகோர்த்து தன் சபதத்தை நிறைவேற்ற முயன்றார் .அதன் காரணமாகவே ஹைதர் அலி உதவிகளை நாடினர் மேலும் வீரமிகு மருது சகோதரர்கள் உடன் இணைந்து அவர்களை கம்பனி எதிர்ப்புப்படைக்கு தலைமை ஏற்க செய்தார்.

ஆங்கிலியம் ,உருது ,பிரெஞ்சு மொழிகளில் கற்று தேர்ந்த வேலுநாச்சியார் ,மைசூர் அரசர் ஹைதர் அலியுடன் உருதில் உரையாடி அவரது உதவியையும் நாடினார் .1780 ம் ஆண்டு வேலுநாச்சியார் திண்டுக்கல்லில் இருந்து ஹைதர் அலி உதவியில் கிடைத்த பத்தாயிரம் குதிரை மற்றும் காலாட்படை யுடன் சென்று காளையார் கோயிலை கைப்பற்றினார். அங்கு தன்னை கட்டிக்கொடுக்காது மரணத்தை தழுவிய உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு வீர வணக்கம் செலுத்தினார் .அந்த இடம் கொல்லங்குடி வெட்டுடையகாளியம்மன் கோயில் என்றழைக்கப்படுகிறது

சிவகங்கை அரசை கைப்பற்ற கைப்பற்ற சின்னமருது, பெரிய மருது மற்றும் குயிலி தலைமையில்போர் நடத்த பட்டது . குயிலி இந்திய வரலாற்றில் முதல் தற்கொலை படை தாக்குதலை தலைமை ஏற்றார் . தலைவன் ஒருவன் மாற்றவும் உதாரணமாக இருக்க வேண்டும் என்ற கொள்கையின்படி . தானே முதல் தற்கொலை தாக்குதலை நடத்தி.ஆங்கிலேயரின் வெடி பொருட்கள் மற்றும் வெடி குண்டு சாலையையும் தகர்த்தார் குயிலி.

இறுதியாக வேலுநாச்சியார் தனது கணவரர் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து அரியணை ஏறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button