தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் காலாண்டு விடுமுறை திறப்பு – இயக்குனர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் காலாண்டு விடுமுறை திறப்பு இயக்குனர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
Table of Contents ( இந்த பக்கத்தில் உள்ளது )

தமிழக மெட்ரிக் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், மீண்டும் பள்ளிகள் வருகிற 10 ஆம் தேதி திங்கள்கிழமை திறக்க வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இந்த ஆண்டு பொது காலாண்டு தேர்வு இல்லை என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டது. அதனை தொடர்ந்து செப். 30 ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடித்து விடுமுறை விட வேண்டும் என கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டது. மேலும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் திறப்பது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பின் படி மெட்ரிகுலேசன் பள்ளிகளும் வருகிற 10 ஆம் தேதி திங்கள்கிழமை திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
TN 6th – 12th Reopen | OCTOBER – 10 |
TN 1st – 5th Reopen | OCTOBER -13 |
TN Matric Reopen | OCTOBER – 10 |
எண்ணும் எழுத்துப் பயிற்சி
தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் எண்ணும் எழுத்துப் பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதால், பள்ளி மற்றும் தொடக்கக் கல்வியின் கட்டுப்பாட்டில் உள்ள 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகளுக்கு வருகிற 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் அக். 10 ஆம் தேதி திறக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்பசாமி தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிபிஎஸ்இ பள்ளிகள் விடுமுறை முடிந்து நாளை (அக். 6) முதல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.