School Morning Prayer Activities

காலை வழிப்பாட்டு செயல்பாடுகள் 21-10-202

School Morning Prayer Activities 21-10-2022

திருக்குறள் :

பால் : அறத்துப்பால்

இயல்: பாயிரவியல்

இதையும் படிங்க

அதிகாரம்: கடவுள் வாழ்த்து

குறள் : 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

பொருள்:
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், இறைவனின் திருவடிகளை தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.

பழமொழி :
Diligence is the mother of good fortune

முயற்சி திருவினையாக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :

1. நீரின்று அமையாது உலகு எனவே நீரை வீணாக்க மாட்டேன்.

2. உழவு தொழில் இல்லை என்றால் இவ்வுலகு இல்லை. எனவே உழவரையும் உழவுத் தொழிலையும் மதிப்பேன்.

பொன்மொழி :

உலகின் எந்த கோடீஸ்வரனாலும் தன் கடந்த காலத்தை வாங்க முடியாது. எனவே ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் சந்தோசமாக இருங்கள் …அன்னை தெரேசா

பொது அறிவு :

Table of Contents ( இந்த பக்கத்தில் உள்ளது )

1. உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது?

ஜூன் 5 .

2. பப்பாளி பழத்தின் தாயகம் எது?

மெக்சிகோ.

English words & meanings :

acou-stic – relating to sound or the sense of hearing. dogs have a much greater acoustic range than humans”. Adjective. செவிப்புலன் சார்ந்த. பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :

கேரட்டை பச்சையாக சாப்பிடும்போது, அதன் நார்ச்சத்து அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனுடன் பிணைக்கிறது மற்றும் உடலில் இருந்து அதை இழுக்க உதவுகிறது. இது முக்கியமானது, ஏனெனில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் முகப்பரு, மனநிலை ஏற்ற இறக்கங்கள் போன்ற பல்வேறு ஹார்மோன் இடையூறுகளுக்கு வழிவகுக்கும்

அக்டோபர் 21

இந்தியக் காவலர் நினைவு நாள்

இந்தியக் காவலர் நினைவு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 21 அன்று கொண்டாடப்மடுகிறது

நீதிக்கதை

முரசு சத்தம்

ஒரு நாள் நரி ஒன்று மிகுந்த பசியோடு இருந்தது. போர்க்களத்துப் பக்கமாக சென்ற போது திடீரென பயங்கர சத்தம் ஒன்று கேட்டது. ஏதோ ஒரு பெரிய விலங்கிற்கு நாம் இன்று இரையாகப் போகிறோம் என்று எண்ணி பயந்து கொண்டிருந்தது. ஆனால் சற்று நேரம் கழித்து அருகில் இருந்த ஒரு பாறையின் மேல் ஏறி சுற்றும் முற்றும் பார்த்தது.

பிறகு தான் தெரிந்தது அது ஒரு போர் முரசு என்று. அதன் அருகில் மெல்ல சென்று சுற்றிப் பார்த்தது. பசியில் இருந்த நரி அந்த முரசினுள் இருந்து சத்தம் வருகிறது என்பதை அறிந்து கொண்டது. அந்த முரசினுள் ஏதோ ஒரு விலங்கு உள்ளே இருந்து கொண்டு தான் ஒலி எழுப்புகிறது என்று எண்ணி தன் கூரிய பற்கள் மற்றும் நகங்களை கொண்டு அம்முரசினை கிழித்து உள்ளே இருக்கும் மிருகத்தினை தின்ன எண்ணியது. உள்ளே சென்று பார்த்தால் முரசுக்குள் ஒன்றும் இல்லை. ஏமாற்றம் அடைந்த நரி உடல் சோர்வால் மயக்கமுற்று கீழே விழுந்தது.

நீதி :
ஆசையே துன்பத்திற்குக் காரணம்

21-10- 2022

இன்றைய செய்திகள்:

Today News:

உருவாக்கம் : dailyexam.net

21-101-2022 School Morning Prayer Activities

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button