TNPSC Notes
முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் | Muthu kumarasamy Pillai Tamil
முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் | Muthu kumarasamy Pillai Tamil
முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் | Muthu kumarasamy Pillai Tamil
Table of Contents ( இந்த பக்கத்தில் உள்ளது )

- கடவுளரையோ, அரசரையோ, பிறரையோ குழந்தையாகப் பாவித்து அவர்தம் குழந்தைப் பருவத்தைப் பத்துப் பருவங்களாகப் பகுத்துக் கொண்டு, பருவத்துக்குப் பத்து ஆசிரிய விருத்தங்கள் அமையப் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியமாகும்.
- புள்ளிருக்கு வேளூரில் (வைத்தீசுவரன் கோவில்) எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானின் பெயர் முத்துக் குமாரசுவாமி. அவர்மீது பாடப் பட்டமையால் இது முத்துக் குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் எனப் பெயர் பெற்றது.
- பிள்ளைத் தமிழ் ஆண்பால் பிள்ளைத் தமிழ், பெண்பால் பிள்ளைத் தமிழ் என இருவகைப்படும்.
- ஆண்பால் பிள்ளைத் தமிழ் – காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆகிய பத்துப் பருவங்களை அமைத்துப் பாடுவது.
- இறுதியில் உள்ள மூன்று பருவங்களுக்குப் பதிலாக அம்மானை, கழங்கு (நீராடல்), ஊசல் என்பன பருவங்கள் அமைத்துப் பாடுவது பெண்பாற் பிள்ளைத்தமிழ் என்றும் கூறுவர்.
- வருகைப் பருவம் நூலின் ஆறாவது பருவமாகும். குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது வருகைப் பருவம்.
- தளர்நடையிட்டு வரும் குழந்தையின் சிறப்புகளை எடுத்துக்கூறி, அருகில் வருக வருக என வாய்குளிர, மனங்குளிர அழைக்கும் பாடல்களைக் கொண்டதாய் வருகைப் பருவம். அமைந்துள்ளது.
- செங்கீரைப் பருவம் பிள்ளைத்தமிழில் இரண்டாம் பருவமாகும்.
- பொருள் தெரியாத ஒலியைக் குழந்தை எழுப்பும் பருவத்தைக் குறிப்பது இது. இளங்குழந்தை ங்க ங்க என்று கூறக்கேட்டுத்தாய் உகக்கும் பருவம் இது.
- இவ்வொலி மழலையைக் காட்டிலும் இளம் பருவத்தை உடையது. (கீர் – சொல்) தொட்டில் பிள்ளை தலையையுயர்த்திக் கையால் ஊன்றி உடம்பை அசைத்தலைச் செங்கீரையாடுதல் என்பர்.
ஆசிரியர் குறிப்பு
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழைப் பாடியவர் குமரகுருபரர் ஆவார்.
தாமிரபரணி நதிக்கரையிலுள்ள திருவைகுண்டத்தில் சண்முக சிகாமணிக் கவிராயருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மகனாகப் பிறந்தார்.
பிறந்தது முதல் ஐந்தாண்டு வரையில் பேச்சின்றி இருந்தார். பின்னர்த் திருச்செந்தூர் முருகப் பெருமான் திருவருளால் பேசுந்திறம்பெற்றார்.
தமிழ் மீது இவருக்கு இருந்த அன்பு அளவிடற்கரியது. இவர் தமிழையும், தெய்வத்தையும் இருகண்களாகக் கொண்டு வாழ்ந்த துறவியாவார்.
நூல்கள்
- முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்
- மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ்
- கந்தர் கலிவெண்பா
- கயிலைக் கலம்பகம்
- மதுரைக் கலம்பகம்
- காசிக் கலம்பகம்
- சகலகலாவல்லி மாலை
- திருவாரூர் மும்மணிக்கோவை
- திருவாரூர் நான்மணிமாலை
- நீதிநெறி விளக்கம்
மக்களின் வாழ்வுக்குத் தேவையான நீதிகளைச் சுட்டிக்காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.
- நீதிநெறி விளக்க நூலில் கடவுள் வாழ்த்து உட்பட 102 வெண்பாக்கள் இடம்பெற்றுள்ளன.
- மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், பிள்ளைத் தமிழ் இலக்கிய வகையில் மிகச் சிறந்த ஒன்று என்பர்.
- தமிழ், வடமொழி, இந்துத்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர்.
- திருப்பனந்தாளிலும், காசியிலும் தம்பெயரால் மடம் நிறுவி உள்ளார்.
- காசியில் இறைவனது திருவடியடைந்தார்.