பேச்சுப் போட்டி

மகாத்மா காந்தி பேச்சு போட்டி – கட்டுரை

மகாத்மா காந்தி பேச்சு போட்டி – கட்டுரை

மகாத்மா காந்தி பேச்சு போட்டி – கட்டுரை Mahatma gandhi history in tamil 

மகாத்மா காந்தி பேச்சு போட்டி – கட்டுரை
மகாத்மா காந்தி பேச்சு போட்டி – கட்டுரை

மகாத்மா காந்தி அறிமுகம்

mahatma gandhi history in tamil gandhi biography in tamil:  மகாத்மா காந்தி மோகன்தாஸ் கரம்சந்த் என்றால் எத்தனை பேருக்குத் தெரியும். ஆனால் மகாத்மா காந்தி என்றால் உலகமே அறியும்.

அகிம்சை அவருடைய கொள்கையாயிருந்தது, அதில் வெற்றி பெறுவதே அவரது இலட்சியமாயுமிருந்தது. அவர் வெற்றிபெற்றார். அதனால் தான் சரித்திரத்தில் சிறப்பான இடத்தைப் பெற்றார்.

மகாத்மா காந்தி பிறப்பு

1869 அக்டோபர் 2-ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தர் என்னும் இடத்தில் அந்த உத்தமர் பிறந்தார். வணிக மரபினர். தந்தை உத்தம சந்த் ராஜ்காட் சமஸ்தானத்தில் உயர் பதவி வகித்தவர்.

தாய் மிகவும் தெய்வ பக்தி உடையவர். காந்தி தம்முடைய சிறுவயதில் கேட்ட ராமாயணக் கதையும், அவர் பார்த்த அரிச்சந்திர நாடகமும் அவருடைய மனதில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்தின.

சிறு வயதில் தீய சிநேகத்தின் தூண்டுதலில் சில தீய பழக்கங்களும் அவருக்கேற்பட்டிருந்தன. அப்போது வீட்டுச் செலவுக்கான பணம் வீட்டில் பொதுவான ஒரு இடத்தில் வைக்கப்பட்டிருக்கும்.

அவரவர் தமது செலவுக்கு தேவையான பணத்தை அதிலிருந்து எடுத்துக் கொள்வார்கள்.

மகாத்மா காந்தி தீயபழக்கங்கள்

கொஞ்சம்  நாட்களாக வீட்டில் அடிக்கடி பணம் குறைந்து கொண்டிருந்தது. தகவல் வீட்டுத்தலைவருக்குத் தெரிய வந்தது. மோகன்தாஸ் பணத்தை எடுத்துச் சென்று புகை பிடித்திருக்கிறார் என்பதை அறிந்த தந்தை வருத்தப்பட்டார்.

‘சொந்த வீட்டிலேயே திருடலாமா? என்று மகனிடம் கேட்டார். அன்று முதல் காந்தி உண்மை பேசலானார். தம்முடைய தவறுகளை ஒரு காகிதத்தில் எழுதி தந்தையிடம் கொடுத்து மன்னிப்பு வேண்டினார்.

மகாத்மா காந்தி பட்டப்படிப்பு

1888-ல் காந்தி பள்ளிப் படிப்பை முடித்து சட்டம் பயில்வதற்காக இலண்டன் சென்றார். அப்போது தாய் அவரிடம் மது, மாது பழக்கங்கள் கூடாது என்று சத்தியம் வாங்கிக் கொண்டார்.

ஆனால், இலண்டன் சென்றதுமே தம்முடைய சத்தியத்தை மீறி ஆடம்பர உடையணிந்து பெண்களுடன் விருந்துகளில் நடனமாடினார், மது வருந்தவும் செய்தார். சில நாட்களிலேயே தமது தவற்றை உணர்ந்து திருந்தவும் செய்தார்.

மகாத்மா காந்தி அடைந்த துன்பங்கள்

1893-ல் வழக்கறிஞராய் தொழில் செய்ய தென் ஆப்பிரிக்கா சென்றார். அங்கே சுதேசிகளும் (கறுப்பர் கள்), இந்தியர்களும் வெள்ளையர்களின் கொடுமைகளுக்கு ஆளாகி இருப்பவர்களை கண்டு மனம் கொதித்தார்.

நேட்டாலில் இருந்தபோது இரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்த காந்தியை வெள்ளையர்கள் பாதி வழியிலேயே வண்டியிலிருந்து வெளியே தள்ளிவிட்டார்கள். அங்கே வெள்ளையர்களால் அவர் அடைந்த துன்பங்கள் பல.

ஆனால், அத்தனையும் தாங்கிக் கொண்டு கறுப்பர் களின் உரிமைகளுக்காகப் போராடினார். டால்ஸ்டாயை தம்முடைய ஆதர்ச வழிகாட்டியாய் கொண்ட காந்தி, போனிக்ஸ் என்னுமிடத்தில் ஓர் ஆசிரமமும் நடத்தினார்.

மகாத்மா காந்தி போராட்டம்

வெள்ளையர்களை அமைதியான வழியில் எதிர்த்துப் போராடிய காந்தி, அந்நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். தாய் நாட்டினர் வெள்ளையரின் ஆட்சியில் உரிமை அற்று வாழும் அவலம் கண்டார்.

அப்போது காங்கிரஸ் கட்சி வெள்ளையரை எதிர்த்து சுதந்திரப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தது. காந்தி காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பு கொண்டார். அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றின் கரையில் ஆசிரமம் ஒன்றை அமைத்தார்.

நம்முடைய பொருளாதாரத்தில் தன்னிறைவு கண்டால்தான் வெள்ளையர் ஆட்சியை ஒழிக்க முடியும் என்று காந்தி நம்பினார். மக்களிடம் அந்நியப் பொருட் களை வாங்காதீர்கள் என்றார்.

நம்முடைய துணியை நாமே தயாரித்து அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடெங்கும் அந்நியத் துணிகளும் அயல்நாட்டுப் பொருட்களும் குவியல் குவியலாய் எரிக்கப்பட்டன. வீட்டுக்கு வீடு ராட்டை சுற்றி நூல் நூற்றார்கள்.

மகாத்மா காந்தி சிறை தண்டனை

காந்தி சுதந்திரப் போராட்டத்தை அகிம்சை வழியில் நடத்தினார். நாடெங்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைதாயினர். சட்ட மறுப்பு கிளர்ச்சி செய்தபோது வெள்ளையர் அரசு காந்திக்கு ஆறு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.

ஆனால், அவருடைய உடல்நலம் பாதிக்கப் பட்ட காரணத்தால் இரண்டு ஆண்டுகளிலேயே அவரை விடுதலை செய்தது. இந்தியப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இங்கிலாந்தில் வட்டமேசை மாநாடு நடந்தது.

அப்போது காந்தி இடுப்பில் வேட்டியும் மேலே ஒரு துண்டும் உடுத்திச் சென்றிருந்தார். ‘இந்தப் பக்கிரிதான் இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கப் போறாராம்’ என்று சர்ச்சில் அவரைப்பற்றிக் கிண்டலாய் விமர்சனம் செய்தார்.

ஆனால், காந்தியின் ஆங்கில வாதத்தைக் கேட்டு அசந்து போனார்.

மகாத்மா காந்தி பெற்று தந்த சுதந்திரம்

காந்தியின் தலைமையில் நாடே திரண்டு சுதந்திரப் போராட்டம் நடத்தியதன் விளைவாய் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்குவதைத் தவிர்க்க முடியாது என்பதை பிரிட்டிஷ் அரசு உணர்ந்தது.

அப்போது பிரிட்டனில் தொழிற் கட்சியினர் ஆட்சிக்கு வந்திருந்தனர். அதனால், இந்தியா சுதந்திரம் பெறுவது சாத்தியமாயிற்று. 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் நாள் நாடு சுதந்திரம் பெற்றது.

ஆயினும், முஸ்லீம்கள் தங்களுக்குத் தனி நாடு வேண்டு மென்று கலகம் செய்தார்கள். இருதரப்பிலும் உயிர்ச் சேதம். ஜின்னா பாகிஸ்தான் அமைப்பதில் உறுதியாய் நின்றார். காங்கிரஸ் தலைவர்கள் நாட்டைக் கூறு போடத் தயங்கியபோது காந்தி அவர்கள் நமது சகோதரர்கள்.

தங்களுடைய பங்கை அவர்கள் பெற்றுச் செல்லட்டும் என்று கூறிவிட்டார். காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது காந்தி விலகியே நின்றார். மது விலக்கு, தீண்டாமை ஒழிப்பு என்று சமூகச் சீர்திருத்தங்களில் தம்மை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டார்.

காந்தி ரொம்பவும் எளிய வாழ்க்கை வாழ்ந்தவர். அவருடைய உணவும் எளிமையானதே. தம்முடைய ஆசிரம விதிகளைக் கண்டிப்புடன் பின்பற்றுவதில் அவர் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாயிருந்தார்.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களை ஆசிரமத்தில் சேர்த்துக் கொண்டிருந்தவர், தம்முடைய சொந்த காரியங்களுக்கும் (சமைப்பது பரிமாறுவது) அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார். தம்முடைய நாற்பது களிலேயே தாம்பத்ய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

மகாத்மா காந்தி சுட்டு கொலை

நாட்டு நலனுக்காக சொந்த நலன்களைத் துறந்தவர் அவர். 1948 ஜனவரி 30-ஆம் நாள் வழக்கம் போல் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட மகாத்மாவை கோட்ஸே என்ற மதவெறியன் சுட்டுக் கொன்றான். ஒரு சாத்வீகமான மனிதர் மிகக் குரூரமான முறையில் கொலையுண்டது வரலாற்றுச் சோகம் gandhi biography in tamil .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button