Today News
Trending

ஏய் இங்க பாருடி தீபாவளி போனஸ் வாங்கிட்டான் போல? பந்தாவா இருக்கான்! – தீபாவளி மீம்ஸ்

ஏய் இங்க பாருடி தீபாவளி போனஸ் வாங்கிட்டான் போல? பந்தாவா இருக்கான்! - தீபாவளி மீம்ஸ்

பெண்கள்: ஏய் இங்க பாருடி தீபாவளி போனஸ் வாங்கிட்டான் போல? பந்தாவா இருக்கான்!

நம்ம தல: நானே எவன்ட கடன் வாங்கலாம்னு போய்ட்டுஇருக்கேன். இவளுக வேற!

இப்பொழுது மக்கள் பலரும் தீபாவளிக்கு ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இந்த திருநாளை முன்னிட்டு அரசு பல சலுகைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. வெளியூரில் வேலை பார்ப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்ல பல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது்


மேலும் பல நிறுவனங்கள் ஊழியர்களுக்கு போனஸ்களை வழங்கி வருகிறது இன்னும் இரண்டே நாட்கள் தான் இருக்கும் நிலையில் தற்போது தீபாவளிகான எந்த ஆர்ப்பாட்டமும் அவ்வளவாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும் தீபாவளி கொண்டாடுவதில் முக்கியமான ஒன்று பட்டாசு வெடிப்பது தான்.

லேபர்: என்னங்க முதலாளி இன்னும் கம்முனே இருக்கீங்க!

ஓனர்: ஆத்தீ! இன்னைக்கு போனஸ் வாங்காம , போக மாட்டான் போல இருக்கே!

அதற்கு இடைஞ்சல் அளிக்கும் விதமாக இப்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தீபாவளி அன்றும் இதே நிலை தொடர்ந்தால் கஷ்டம் தான். இந்நிலையில் தீபாவளி நாளை சிறப்பிக்கும் விதமாக இணையத்தில் மீம்ஸ்கள் பலவும் வைரலாகி வருகிறது.

அதுவும் தலைவர் வடிவேலு காமெடியை மையமாக வைத்து தான் மீம்ஸ்கள் பலவும் வைரலாகி வருகிறது. குறிப்பாக போனஸ், வீட்டு பலகாரங்களை திருடி சாப்பிடுவது, வெடிக்கு பயப்படுவது, 90ஸ் கிட்ஸ் தீபாவளி சோதனைகள் என பலவும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விதமாக உள்ளது.

என்ன தான் தீபாவளியில் இவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இந்த மீம்ஸ்களை பார்க்கும்போது எல்லாமே மறந்துருது என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button