9th Social Guide TM,

9th Social Science Guide | Lesson 8 – நவீன யுகத்தின் தொடக்கம்

9th Social Science Guide | Lesson 8 – நவீன யுகத்தின் தொடக்கம் Book Back Questions and Answers

Hello friends our tnbooks.guide provide TN 9th social science Full Guide solutions book back Question and answer.you can Download 9th social Guide both Tamil Medium and English Medium. These 9th standard social science book back answers help for your study purpose thanks for visit our website.

I. சரியான விடையை எழுதுக

1.கீழ்க்கண்டவர்களில் யார் மனித நேயத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்?

அ) லியானார்டோ டாவின்சி

ஆ) பெட்ரார்க்

இ) ஏராஸ்மஸ்

ஈ) தாமஸ் மூர்

Answer:

ஆ) பெட்ரார்க்

2.‘ஸ்கூல் ஆஃப் ஏதென்ஸ்’ என்ற ஓவியத்தை வரைந்தவர்

அ) ரஃபேல்

ஆ) மைக்கேல் ஆஞ்சலோ

இ அல்புருட் டியரர்

ஈ) லியானார்டோ டாவின்சி

Answer:

அ) ரஃபேல்

3.வில்லியம் ஹார்வி _____ கண்டுபிடித்தார்.

அ) சூரியனே பிரபஞ்சத்தின் மையம்

ஆ) பூமியே பிரபஞ்சத்தின் மையம்

இ) புவியீர்ப்பு விசை

ஈ) இரத்தத்தின் சுழற்சி

Answer:

ஈ) இரத்தத்தின் சுழற்சி

4.“தொண்ணூற்றைந்து கொள்கைகள்”களை எழுதியவர் யார்?

அ) மார்ட்டின் லூதர்

ஆ) ஸ்விங்லி

இ) ஐான் கால்வின்

ஈ) தாமஸ்மூர்

Answer:

அ) மார்ட்டின் லூதர்

5.‘கிறிஸ்தவ மதத்தின் நிறுவனங்கள்’ என்ற நூலை எழுதியவர் _____

அ) மார்ட்டின் லூதர்

ஆ) ஸ்விங்லி

இ) ஜான் கால்வின்

ஈ) செர்வாண்டிஸ்

Answer:

இ) ஜான் கால்வின்

6.பூமத்திய ரேகையை கடந்த முதல் மாலுமி யார்?

அ) மாலுமி ஹென்றி

ஆ) லோபோ கோன்ஸால்வ்ஸ்

இ பார்த்தலோமியோ டயஸ்

ஈ) கொலம்பஸ்

Answer:

ஆ) லோபோ கோன்ஸால்வ்ஸ்

7.பசிபிக் பெருங்கடல் எனப் பெயரிட்டவர்

அ) கொலம்பஸ் ______

ஆ) அமெரிகோ வெஸ்புகி

இ) ஃபெர்டினான்ட் மெகெல்லன்

ஈ) வாஸ்கோடகாமா

Answer:

இ) ஃபெர்டினான்ட் மெகெல்லன்

8.அமெரிக்க கண்டம் ____ என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.

அ) அமெரிகோ வெஸ்புகி

ஆ) கொலம்பஸ்

இ) வாஸ்கோடகாமா

ஈ) ஹெர்நாண்டோ கார்டஸ்

Answer:

அ) அமெரிகோ வெஸ்புகி

9.கிழக்கு இந்தியாவில் போர்ச்சுகீசியர்களின் வசமிருந்த பகுதிகளுக்குத் தலைமையகமாக _____ இருந்தது.

அ) மணிலா

ஆ) பம்பாய்

இ பாண்டிச்சேரி

ஈ) கோவா

Answer:

ஈ) கோவா

10.கீழ்க்கண்ட தாவரங்களுள் எது அமெரிக்காவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது?

அ) கரும்பு

ஆ) சர்க்கரைவள்ளிக்கிழங்கு

இ அரிசி

ஈ) கோதுமை

Answer:

ஆ) சர்க்கரைவள்ளிக் கிழங்கு

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

1.கி.பி. 1453ல் கான்ஸ்டாண்டி நோபிளை _____ கைப்பற்றினர்.

Answer:

உதுமானியத் துருக்கியர்

2.______ என்பவர் மனிதநேயவாதிகளிடையே ஒரு இளவரசர் என்று அறியப்படுகிறார்.

Answer:

எராஸ்மஸ்

3._____ சிஸ்டைன் திருச்சபை மேற்கூரைகளில் வரையப்பட்ட தன்னுடைய ஓவியங்களுக்காக புகழ்பெற்றவராவார்.

Answer:

மைக்கேல் ஆஞ்சலோ

4.கத்தோலிக்க திருச்சபை நிறுவனத்துக்கு உள்ளேயே மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் _____ ஆகும்.

Answer:

எதிர்மத சீர்திருத்தம்

5.வணிகப்புரட்சியின் தலையாய அம்சங்கள் _____, _______ மற்றும் _____ ஆகும்.

Answer:

வங்கிகள், கூட்டுப்பங்கு நிறுவனங்களின் தோற்றம், வர்த்தகத்தின் வளர்ச்சி

III. சரியான கூற்றினைக் கண்டுபிடி.

1.அ) மார்ட்டின் லூதர், கத்தோலிக்க திருச்சபையால் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதால் அவர் அதனுடனான உறவைத் துண்டித்துக் கொண்டார்

ஆ) ஜெனிவாவில் இருந்து ஜான் கால்வினின் அரசாங்கம் தாராளமயமானதாகவும் வேடிக்கை நிரம்பியதாகவும் இருந்தது.

இ) எட்டாம் ஹென்றி கத்தோலிக்க திருச்சபையுடன் ஆழமான இறையியல் வேறுபாடுகளைக் கொண்டிருந்தார்.

ஈ) தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.

Answer:

(ஈ) தேவாலயத்துக் கூட்டு வழிபாட்டின் முக்கியத்துவத்தையும், விழாக்களின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தி அழுத்தம் தந்தது.

2.அ) புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.

ஆ) குதிரைகள் அமெரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவை.

இ) நவீன யுகத்தின் தொடக்க காலத்தில், பொருளாதார நடவடிக்கைகளில் அரசு தலையிடவில்லை.

ஈ) போர்ச்சுகீசியர்கள் அரேபியர்களுடன் இணைந்து இந்தியாவில் வாணிக நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

Answer:

(அ) புதிய தரை மற்றும் கடல்வழி கண்டுபிடிப்புகளால் பொருளாதார மையங்கள் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலுக்கு மாற்றப்பட்டன.

V. கீழ்க்கண்ட வினாக்களுக்கு சுருக்கமான விடையளி

1.அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பு எவ்வாறு மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை விவரி.

Answer:

மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளின் மீது தாக்கம் :

15ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஜோஹன்னஸ் கூட்டென்பர்க் ஜெர்மனியில் அச்சு இயந்திரத்தைக்

கண்டுபிடித்தார். இது நவீன மயமாதலை வேகப்படுத்தியது.

இத்தாலியிலிருந்த கல்வியறிஞர்கள் கிரேக்க, இலத்தீன் செவ்வியல் இலக்கியத்தின் கையெழுத்துப் பிரதிகளை சேகரித்தனர். பின்னர் அவற்றை அச்சிட்டு வெளியிட்டனர். இது மறுமலர்ச்சியின் புத்தாங்கக்களுக்கு தூண்டுகோலாய் அமைந்தன.

மதச்சீர்திருத்தக்காரர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் அத்துமீறல்களைக் கோடிட்டுகாட்டும் பிரசுரங்களை விநியோகித்தனர். புத்தகங்களையும் பதிப்பித்தனர். மார்ட்டின்லூதரின் “95 கொள்கைகள்”

தாலமியின் ‘ஜியாகரபி (புவியியல்) என்ற நூலின் ஒரு பிரதி பைஸாண்டியன் பேரரசிலிருந்து மேற்குலகுக்கு கொண்டுவரப்பட்டது. அச்சு இயந்திரத்தின் கண்டுபிடிப்பினால் பல பிரதிகள் அச்சிடப்பட்டு பரந்த அளவில் சுற்றுக்கு விடப்பட்டன. அதனால் புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகளுக்கான அறிவு மிகப் பெரிய அளவில் அதிகரித்தது.

2.மறுமலர்ச்சியின் விளைவுகள் பற்றி ஒரு சிறு குறிப்பு வரைக.

Answer:

மறுமலர்ச்சியின் விளைவுகள் :

  • ‘மனிதநேயம்’ என்றகருத்து மறுமலர்ச்சியின்மிகமுக்கியத்துவம் வாய்ந்தபங்களிப்பாகும். தனிநபர்வாதம், மதச்சார்பற்ற தன்மை, தேசியவாதம் நோக்கிய திடமான நகர்வை அடையாளப்படுத்தியது.
  • வட்டார மொழிகளின் வளர்ச்சியைச் செழுமைப்படுத்தியது. தேசிய அரசுகளின் எழுச்சிக்கு அடித்தளம் அமைத்தது.
  • திருச்சபையின் ஊழல் நடைமுறைகள் விமர்சிக்கப்பட்டன. மதச் சீர்திருத்தவாத இயக்கம் உற்சாகப் படுத்தப்பட்டது.
  • புதிய நிலவழிப்பாதைகள் கண்டுபிடிப்பு, உலக வரைபட மாற்றியமைப்பு, அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள் ஆகிறவற்றுக்கு மறுமலர்ச்சி இட்டுச் சென்றது.

3.கத்தோலிக்க திருச்சபை மீது மார்ட்டின் லூதர் கொண்டிருந்த மாற்றுக் கருத்துகளை விவரி.

Answer:

மார்ட்டின் லூதரின் மாற்றுக் கருத்துக்கள் :

  • சடங்குகளும், பாவமன்னிப்பு நடைமுறைகளும் ஆன்மவிடுதலைக்கு இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையை நிராகரித்தார். ‘நம்பிக்கையினால் நியாயப்படுத்துதல்’ என்ற கொள்கை முடிவை முன்வைத்தார்.
  • தெய்வீக பற்றுறுதியினால் மட்டுமே கடவுளின் கருணை மனிதர்களுக்கு அருளப்படுமே அல்லாமல் மனிதர்களின் செயல்களினால் அல்ல.
  • பைபிள் அனைத்து மக்களாலும் படிக்கப்பட்டு விவாதிக்கக்கூடியதே அல்லாமல் திருச்சபையால் மட்டுமே வாசித்து விளக்கமளிக்கக்கூடிய ஒன்றல்ல.
  • கடவுளுக்கும் ஒரு தனிநபருக்குமிடையே திருச்சபை ஓர் இணைப்புப்பாலம் என்பதையும் நிராகரித்தார்.

4.மத எதிர் சீர்திருத்தம் பற்றி ஒரு குறிப்பு வரைக.

Answer:

மதஎதிர் சீர்திருத்தம் :

  • கத்தோலிக்க திருச்சபைக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்தின் சவாலை எதிர்கொள்வதற்காக போப் மூன்றாம் பால் மற்றும் அவர் வழி வந்தவர்கள் பல தீவிரமான சீர்திருத்தங்களை அறிவித்தார்கள். இது “எதிர்மத சீர்திருத்தம்” என அறியப்பட்டது.
  • ஊழல்களைக் கடுமையான முறையில் கையாண்டதுடன், பதவிகளின் விற்பனையையும் தடை செய்தனர்.
  • கூட்டு வழிபாடு, விழாக்கள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் ட்ரென்ட் கவுன்சில் மீண்டும் வலியுறுத்தியது.
  • புனித மறைநூல்களை திருச்சபை மட்டுமே படித்து விளக்கமளிக்க முடியும் என்று அறிவித்தது.
  • திருச்சபைக்கு எதிரான முயற்சிகளைக் கையாளுவதற்கு மத நீதிமன்றத்திற்கு புத்துயிர் அளித்தது.
  • இயேசு சபைக்கு அதிகாரப்பூர்வமான அனுமதியை வழங்கியது.

5.கொலம்பியப் பரிமாற்றம்’ என்றால் என்ன?

Answer:

கொலம்பியப் பரிமாற்றம் :

  • அமெரிக்க நாடுகளுக்கும் ஐரோப்பாவுக்குமிடையே தாவரங்கள், விலங்குகள், தொழில்நுட்பம் பண்பாடு மற்றும் விநோதமான நோய்கள் ஆகியவற்றின் இடப்பெயர்வுக்கு ஐரோப்பிய காலனியாதிக்க சக்திகள் அமெரிக்காவை வெற்றி கொண்டதே காரணமாகும். இது கொலம்பியப் பரிமாற்றம் எனப்படும்.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விரிவான விடையளி

1.மறுமலர்ச்சி, மத சீர்திருத்தம் மற்றும் புவியியல் சார் கண்டுபிடிப்புகள் எவ்வாறு நவீனயுகத்தின் வருகையைப் பறை சாற்றின – விவாதி.

Answer:

மறுமலர்ச்சி:

  • செவ்வியல் இலக்கியத்தையும் கலையையும் ஆராய்வதில் பேரார்வமும் உத்வேகமும் தோன்றியது. படைப்பூக்கம் எழுத்துக்கள், கலை, கட்டமானம், இசை ஆகியவற்றில் பிரதிபலித்தது.
  • செவ்வியில் இலக்கியப் பிரதிகள் சேகரிக்கப்ப்டடு, அச்சிட்டு வெளியிடப்பட்டது மறுமலர்ச்சி புத்தாக்கங்களுக்கு தூண்டுகோலாய் அமைந்தது.
  • கலை, அறிவியல் சார் படிப்புகள் இத்தாலிய பல்கலைக்கழகங்களில் புகழ்பெற்றுவிளங்கியதால் ஐரோப்பா
  • முழுவதிலுமிருந்து மாணவர்கள் திரண்டு சென்றனர். மனித நேய சிந்தனைகளை அறிமுகமானது. பல மனித நேய இலக்கியங்கள் தோன்றின. கலைத்தன்மை மிளிரும் படைப்புகளை உருவாக்கினர்.

மதச் சீர்திருத்தம்:

  • மறுமலர்ச்சிகால மனித நேயத்தின் தீவிர புத்தார்வ தன்மையும், விமர்சனப்பூர்வமான சிந்தனையும் மக்கள் திருச்சபையின் நடைமுறைகளைக் கேள்வி கேட்பதற்கு உதவின.
  • எராஸ்மஸ், கர்தாமஸ் மூர் திருச்சபையையும் அதன் ஊழல் மிக்க நடைமுறைகளையும் விமர்சித்து வந்தனர்.
  • மதச் சீர்த்திருத்தக்காரர்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் அத்துமீறல்களைக் கோடிட்டு காட்டும் பிரசுரங்களை விநியோகிதிதனர். புத்தகங்களையும் பதிப்பித்தனர்.
  • 16ஆம் நூற்றாண்டுக்கு முன்னதாக திருச்சபையை சீர்திருத்த மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியுற்றாலும், பகுத்தறிவின் யுகத்தில் சீர்திருத்தவாதிகளின் முயற்சிகள் தேசிய அரசுகளின் ஆட்சியாளர்களால் ஆதரிக்கப்பட்டன.

புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் :

  • மாலுமிகளுக்குப் பயிற்சியளிக்க கடற்பயணப் பள்ளியை, போர்ச்சுக்கல் இளவரசர் ஹென்றி என்ற கடலோடி நிறுவினர்.
  • நெடுந் தொலைவுக் கடற்பயணத்திற்கான ஆர்வம், புதிய கடல் பகுதிகளில் தேடுதல் நிகழ்த்தும் சாகச உத்வேகம் புத்தார்வத்தினால் தூண்டப்பட்டன.
  • மார்க்கோபோலே, இபின் பதூரா பயணக் குறிப்புகள், இறைப்பணியாளர்களின் மதம் பரப்பும் எண்ணத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
  • கிழக்குக்கும் மேற்குக்கும் இடையே அமைந்த நிலவழிப்பாதையை உதுமானிய துருக்கியர்கள் மூடியதால் ஐரோப்பிய வர்த்தகர்களின் பொருளாதார பாதிப்புக்குள்ளாயிற்று. ஆசியாவுக்கு புதிய கடல்வழிப்பாதை கண்டுபிடிக்க உந்துதலை ஏற்படுத்தியது.

2.புவியியல்சார் கண்டுபிடிப்புகளின் விளைவுகள் குறித்து ஆராய்க.

Answer:

புவியியல் சார் கண்டுபிடிப்புகளின் விளைவுகள் :

  • புவியியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் உலகைப் பற்றிய ஐரோப்பியப் புரிதலை மாற்றியமைத்தன. உலக வரைபடத்தின் மீள் வரைவுக்கு இட்டுச் சென்றது.
  • ஐரோப்பாவின் பொருளாதார மையம் இத்தாலிய நகர அரசுகளிலிருந்து ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய இரு அரசுகளுக்கு இடம் பெயர்ந்தது.
  • ஸ்பானியர்கள் மெக்ஸிகோவையும், தென் அமெரிக்காவையும் வெற்றி கொள்ளவும், கூடுதலான ஆய்வுத் தேடல் பயணங்களைத் தொடரவும், வெற்றி கொண்ட பகுதிகளை குடியேற்றங்களாக மாற்றவும் வழி செய்தது.
  • மரண ஆபத்துமிக்க நோய்கள் ஏற்றுமதியால் அமெரிக்காவின் உள்ளூர் மக்களின் பெருந்திரளான அழிவுக்கு காரணமாய் அமைந்தது.
  • ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அடிமைகள் ஐரோப்பிய நாடுகளால் விலைகொடுத்து வாங்கப்பட்டனர். அட்லாண்டிக் நெடுகிலும் நடைபெற்ற வர்த்தகம் முக்கோண வர்த்தகமானது. இவ்வணிகத்தின் மூலம் ஐரோப்பிய நாடுகள் லாபம் ஈட்டினர்.
  • வணிகப் புரட்சிக்கு இட்டுச் சென்றன. இப்புரட்சியின் சிறப்பு அம்சங்கள் வங்கிகள், கூட்டுப்பங்கு நிறுவனங்களின் தோற்றம், வர்த்தகத்தின் வளர்ச்சி ஆகும்.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. ஐரோப்பிய மாலுமிகளின் படங்களை சேகரி.

2. திசைகாட்டும் கருவியின் மாதிரி ஒன்றைத் தயார் செய்.

3. இடைக்கால ஐரோப்பியர் உருவாக்கிய கப்பலின் மாதிரியை தயார் செய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button