9th Social Guide TM,

9th Social Science Guide | Lesson 4 – அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்

9th Social Science Guide | Lesson 4 – அறிவு மலர்ச்சியும், சமூக – அரசியல் மாற்றங்களும்  Book Back Questions and Answers

Hello friends our tnbooks.guide provide TN 9th social science Full Guide solutions book back Question and answer.you can Download 9th social Guide both Tamil Medium and English Medium. These 9th standard social science book back answers help for your study purpose thanks for visit our website.

I. சரியான தேர்வு செய்க

1.ஒரு தத்துவப் பிரிவை நிறுவிய ______ எளிமைக்கும் தன்னல மறுப்பிற்கும் உதாரணமாக விளங்கினார்.

அ) புத்தர்

ஆ) லாவோட்சே

இ) கன்ஃபூசியஸ்

ஈ) ஜொராஸ்டர்

Answer:

அ) புத்தர்

2.மகாவீரரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட மகத அரசர் _______

அ) தனநந்தர்

ஆ) சந்திரகுப்தர்

இ) பிம்பிசாரர்

ஈ) சிசுநாகர்

Answer:

இ) பிம்பிசாரர்

3.வடக்கில் காபூல் பள்ளத்தாக்கிலிருந்து தெற்கில் கோதாவரி வரை பரவியிருந்த வட இந்தியாவின் ______ எனப்பட்ட பதினாறு மாநிலங்களின் அரசுகளின் எழுச்சி ஏற்பட்டது.

அ) மஹாஜனபதங்கள்

ஆ) கனசங்கங்கள்

இ) திராவிடம்

ஈ) தட்சிணபதா

Answer:

அ) மஹாஜனபதங்கள்

4.மும்மணிகள் (திரி ரத்னா) என்ற மூன்று கொள்கைகளை போதித்தவர் _____

அ) புத்தர்

ஆ) மகாவீரர்

இ) லாவோட்சே

ஈ) கன்ஃபூசியஸ்

Answer:

ஆ) மகாவீரர்

5.மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த செய்திகளைத் தன் குறிப்புகளால் அளித்தவர்.

அ) மார்க்கோ போலோ

ஆ) ஃபாஹியான்

இ) மெகஸ்தனிஸ்

ஈ) செல்யூகஸ்

Answer:

இ) மெகஸ்தனிஸ்

6.(i) மகத அரசர்களின் கீழ் இருந்த மகாமாத்ரேயர்கள் அமைச்சர்களுக்குச் செயலாளர்களாகச் செயல்பட்டார்கள்.

(ii) மெகஸ்தனிஸ் எழுதிய ‘இண்டிகா’ என்னும் வரலாற்றுக் குறிப்பு மௌரிய ஆட்சி அமைப்பு மற்றும் சமூகம் குறித்த ஆவணமாக விளங்குகிறது.

(iii) ஒரு பேரரசைக் கட்டமைக்க நந்தர் செய்த முயற்சியை, மௌரிய அரசை உருவாக்கிய அசோகர் தடுத்து நிறுத்தினார்.

(iv) மரபுகளின்படி, சந்திரகுப்தர் அவரது வாழ்வின் இறுதியில் புத்த சமயத்தின் தீவிரமான ஆதரவாளராக இருந்தார்.

அ) (i) சரி

ஆ) (ii) சரி

இ) (i) மற்றும் (ii) சரி

ஈ)(iii) மற்றும்

(iv) சரி

Answer:

ஆ) (ii) சரி

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1.வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த, பிரார்த்தனைகளும், மரபுவழிக் கதைகளும் அடங்கிய புனித இலக்கியத் தொகுப்பு _____ ஆகும்.

Answer:

ஜென்ட் அவெஸ்தா

2.கங்கைச் சமவெளியில் _____ வேளாண்மைக்கு மாடுகளின் தேவை அவசியமானது.

Answer:

இரும்பு – கலப்பை

3.______ தீர்த்தங்கரர்களின் நீண்ட மரபில் வந்தவர் என்றும் 24-வது மற்றும் கடைசி தீர்த்தங்கரர் என்றும் சமணர்கள் நம்புகிறார்கள்.

Answer:

மகாவீரர்

4.புத்தருக்கு ஞானோதயம் ஏற்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள மஹாபோதி கோயில் இன்றும் _____ இல் உள்ளது.

Answer:

புத்தகயா.

5.மௌரியப் பேரரசைப் பற்றியும் குறிப்பாக அசோகரின் தர்மம் சார்ந்த ஆட்சியைப் பற்றியும் அறிந்து கொள்ள _____ பாறைக் குறிப்புகள் பெரிதும் உதவுகின்றன.

Answer:

அசோகரின்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க.

1.அ) வெண்கலக் கருவிகளின் வரவால் கங்கை ஆற்றங்கரையில் இருந்த அடர்த்தியான காடுகளை அகற்றுவது எளிதானது.

ஆ) அசிவிகம் மேற்கு இந்தியாவில் சிறு அளவில் பரவியிருந்தது.

இ) குறிப்பிட்ட இனக்குழுக்கள் ஆதிக்கம் செலுத்திய நிலத்தொகுதிகள் மௌரியர்களுக்கு முற்பட்ட அரசுகள் எனப்பட்டன.

ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.

Answer:

ஈ) இலக்கியங்களில் குறிப்பிடப்படும் அரசுகளில் காசி, கோசலம், மகதம் ஆகியவை வலிமை படைத்தவையாக இருந்தன.

2.அ) மகதத்தின் முதல் முக்கியமான அரசன் அஜாதசத்ரு.

ஆ) நிர்வாகத்துக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்குவதில் பிம்பிசாரர் வெற்றிகரமாகச் செயல்பட்டார்.

இ) வட இந்தியாவில் ஆட்சி செய்த சத்ரியர் அல்லாத அரசவம்சங்களில் முதலாமவர்கள் மௌரியர்களாகும்.

ஈ) ஒரு பேரரசுக்கான கட்டமைப்பை உருவாக்க நந்தர் மேற்கொண்ட முயற்சியை அசோகர் தடுத்து நிறுத்தினார்.

V. சுருக்கமான Answer தருக.

1.ஹீனயானம் மற்றும் மகாயானம் பற்றி குறிப்பு வரைக.

Answer:

ஹீனயானம் (சிறிய பாதை) :

  • ஹீனயானம் புத்தர் போதித்த அசல் வடிவம்.
  • இதைப் பின்பற்றியவர்கள் புத்தரைத் தமது குருவாக ஏற்றார்கள். அவரைக் கடவுளாக வழிபடவில்லை.
  • இவர்கள் உருவவழிபாட்டை மறுத்தார்கள். மக்கள் மொழியையே (பாலி) தொடர்ந்து பயன்படுத்தினார்கள். மகாயானம்
  • மஹாயானம் புத்தர் கடவுளாக வழிபடப்பட்டார்.
  • இதைப் பின்பற்றுவோர் புத்தர் சிலைகளை நிறுவி அவர் புகழ்பாடும் மந்திரங்களைச் சொல்லி வழிபட்டனர்.
  • இவர்கள் தம்முடைய மதநூல்களை சமஸ்கிருதத்தில் எழுதினார்கள்.

2.மும்மணிகள் (திரி ரத்னா) – இச்சொல்லை விளக்கிக் கூறு.

Answer:

  • மும்மணிகள் (திரிரத்னா) என்று அழைக்கப்படும் சமண மதத்தின் முக்கியமான மூன்று கொள்கைகளைக் குறிப்பதாகும். அந்த மூன்று கொள்கைகள்,
  • நன்னம்பிக்கை – ஞானத்தில் நம்பிக்கை வைத்தல்.
  • நல்லறிவு – கடவுள் இல்லை, அனைத்துக்கும் ஆன்மா உண்டு என்ற கருத்துகளை ஏற்றல்.
  • நன்னடத்தை – மகாவீரரின் ஐம்பெரும் சூளுரைகளைக் கடைபிடிப்பிடித்தல்.

3.அஜாத சத்ருவைப் பற்றிக் கூறு?

Answer:

  • இராணுவ வெற்றிகள் மூலம் ஆட்சியை விரிவுபடுத்தும் தனது தந்தையின் கொள்கையைப் பின்பற்றிய அஜாத சத்ரு, தனது தந்தை பிம்பிசாரரைக் கொன்றுவிட்டு கி.மு. 493ல் அரியணை ஏறினார்.
  • ஐந்து மலைகளால் சூழப்பட்ட பாதுகாப்பான, மகதத் தலைநகரான ராஜகிருஹம் கோட்டையை
  • வலுப்படுத்தினார். கங்கைக் கரையில் பாடலி கிராமத்தில் மற்றொரு கோட்டையை கட்டினார்.
  • உள்ளூர் உற்பத்திகளுக்கான பரிமாற்றமையமாக விளங்கிய பாடலிபுத்திரம் மௌரியத் தலைநகரமாக மாறியது. கி.மு. 461ல் அஜாத சத்ரு இறந்தார்.

4.கலிங்கா கல்வெட்டுக் குறிப்பு கூறுவது என்ன ?

Answer:

கலிங்கா கல்வெட்டு:

  • அசோகரின் கல்வெட்டுகளில் 2 கலிங்கக் கல்வெட்டுகள், ஒரு கல்வெட்டில் அசோகர் போர் மற்றும் வெற்றிக்காக நடந்த படுகொலைகளைக் கண்டு தான் அடைந்த மனவேதனையைப் பதிவு செய்துள்ளார்.
  • மற்றொரு கல்வெட்டில் அசோகர், தான் இனிமேல் கலிங்கப் போரில் நடந்த படுகொலைகளில் நூற்றில் ஒரு பங்காகக்கூட, ஏன் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட பொறுத்துக் கொள்ளப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

5.புத்த சமயத்தைப் பரப்ப அசோகர் மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன ?

Answer:

  • தீவிர புத்த பற்றாளரான அசோகர் புத்த மத கருத்துக்களை பாறைகளில் பொறித்தார். விலங்குகளைப் பலியிடுவது தடை செய்யப்பட்டது. விலங்குகளுக்கான மருத்துவமனைகள் திறக்கப்பட்டன.
  • தனது மகன் மகேந்திரனையும், மகள் சங்கமித்திரையையும் புத்த தம்மம் குறித்த செய்தியைப் பரப்ப இலங்கைக்கு அனுப்பினார்.

VI. விரிவான விடையளிக்கவும்.

1.கன்பூசியஸின் ஐந்து முக்கியமான கோட்பாடுகளை விளக்கிக் கூறு.

Answer:

கன்பூசியனிசத்தின் ஐந்து முக்கியக் கொள்கைகள்

  • மேன்மையான மனிதர் என்பவர் வெறும் அறிவாளியோ, அறிஞரோ மட்டும் இல்லை, முன்மாதிரியான நடத்தை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
  • மேன்மையான மனிதர் புத்திசாலித்தனம், துணிச்சல், நல்லெண்ணம் ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டவர்.

நேர்மை :

  • கீழ்ப்படிதல் வற்புறுத்தப்பட்டாலும் உத்தரவு தவறென்றால், இரு மகன் தனது தந்தையை எதிர்க்க வேண்டும், ஓர் அமைச்சர் அரசரை எதிர்க்க வேண்டும்.
  • ஆட்சியாளர்கள் பாரபட்சமின்றி ஆட்சி நடத்தவேண்டும்.

நன்னடத்தை :

  • குழந்தைகள் பெற்றோருக்கு கீழ்ப்படிய வேண்டும், மனைவி கணவனுக்கு கீழ்ப்படிய வேண்டும்.
  • நன்னடத்தை கொண்டோரைத்தான் அரசப் பதவிகளில் அமர்த்த வேண்டும்.

மெய்யறிவு :

  • மெய்யறிவு குடும்பத்திலிருந்துதான் வளரும். ஓர் ஒழுங்கான குடும்பத்தின் கட்டுப்பாடுமிக்க தனி நபர்தான் சமூகத்தின் அடித்தளம்.

நம்பகத்தன்மை :

அரசுக்கு அவசியமான மூன்று விஷயங்கள்

  • நாட்டில் போதுமான உணவு
  • போதுமான இராணுவத் தளவாடங்கள்
  • மக்களுக்கு ஆட்சியாளர் மீது நம்பிக்கை
  • அரசு இயங்க குறிக்கோள் வேண்டும். மக்களுக்கான கடமைகள் உண்டு.

கன்பூசியனிசம் : மதம் அல்ல ஒரு சமூக அமைப்பு அறம்சார் தத்துவ முறை.

2.சமண, புத்த சமயக் கொள்கைகளுக்கு இடையேயான ஒற்றுமைகளையும், வேறுபாடுகளையும் எழுதுக.

Answer:

ஒற்றுமைகள் :

  • மகாவீரரும், கௌதம புத்தரும் தங்களது 30வது வயதில் குடும்பத்தை துறந்தனர்.
  • சமணரும், புத்தரும் மதச் சடங்குகளுக்காக விலங்குகள் பலியிடுவதை எதிர்த்தனர்.
  • சமணர் மற்றும் புத்தரின் துறவு, இரந்துண்ணுதல், அரச குடும்ப சொத்துக்களைத் துறந்து வாழும் முறை மக்களுக்கு ஏற்புடையவர்களாக ஆக்கின.
  • இருவரும் தூய வாழ்க்கை வாழ்ந்தார்கள். தன்னிலை மறுப்பிற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார்கள்.
  • புகழ்பெற்ற மகதமன்னர்களான பிம்பிசாரர், அஜாத சத்ரு ஆகியோரின் சம காலத்தவர்கள்.
  • வைசியர்கள் சமூக நிலையை உயர்ந்த சமணம் மற்றும் பௌத்தம் நோக்கி திரும்பினார்கள்.
  • மகாவீரரும், புத்தரும் சடங்கு, சம்பிரதாயங்களை எதிர்த்து எழுச்சிமிக்க நன்னெறிப் போதனைகளை முன்வைத்தனர்.
  • காலப்போக்கில் சமணமும். பௌத்தமும் இரண்டிரண்டு பிரிவுகளாகப் பிரிந்தன.

வேற்றுமைகள் :

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. அசோகரின் கல்வெட்டுக் குறிப்புகள் குறித்து ஓர் ஆய்வறிக்கை தருக.

2. புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளைச் சித்தரிக்கும் வகையில் நண்பர்களுடன் சேர்ந்து நிகழ்த்தவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button