9th Social Guide TM,

9th Social Science Guide | lesson 10 – தொழிற்புரட்சி Book Back Questions and Answers

9th Social Science Guide | lesson 10 – தொழிற்புரட்சி Book Back Questions and Answers

Hello friends our tnbooks.guide provide TN 9th social science Full Guide solutions book back Question and answer.you can Download 9th social Guide both Tamil Medium and English Medium. These 9th standard social science book back answers help for your study purpose thanks for visit our website.
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.நீராவி படகுப் போக்குவரத்துச் சேவையை நிறுவியவர் யார்?

(அ) ஆர்க்ரைட்

(ஆ) சாமுவேல் கிராம்ப்டன்

(இ) ராபர்ட் ஃபுல்டன்

(ஈ) ஜேம்ஸ் வாட்

Answer:

(இ) ராபர்ட்ஃபுல்டன்

2.மான்செஸ்டர் நகரம் ஏன் ஜவுளி உற்பத்திக்கு உகந்த இடமாகப் கருதப்பட்டது?

(அ) நிலம் கிடைக்கப் பெற்றமை

(ஆ) மிகுந்த மனித வளம்

(இ) நல்ல வாழ்க்கைச் சூழல்

(ஈ) குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை

Answer:

(ஈ) குளிர்ச்சியான தட்பவெப்பநிலை

3.தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்தவர் யார்?

(அ) எலியாஸ் ஹோவே

(ஆ) எலி-விட்னி

(இ) சாமுவேல் கிராம்டன்

(ஈ) ஹம்ப்ரி டேவி

Answer:

(அ) எலியாஸ் ஹோவே

4.நீராவி இயந்திரத்தை பிரான்சில் அறிமுகம் செய்த குடும்பம் எது?

(அ) டி வெண்டெல்

(ஆ) டி ஹிண்டல்

(இ) டி ஆர்மன்

(ஈ) டி ரினால்ட்

Answer:

(அ) டி வெண்டெல்

5.சிலேட்டரை அமெரிக்கக் தொழில் புரட்சியின் தந்தை என அழைத்தவர் யார்?

(அ) எப்.டி. ரூஸ்வெல்ட்

(ஆ) ஆண்ட்ரூ ஜேக்சன்

(இ) வின்ஸ்ட ன் சர்ச்சில்

(ஈ) உட்ரோ வில்சன்

Answer:

(ஆ) ஆண்ட்ரூ ஜேக்சன்

6.கீழ்க்காண்பனவற்றில் எது ஹே மார்க்கெட் நிகழ்ச்சியின் நினைவு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது?

(அ) சுதந்திர தினம்

(ஆ) உழவர் தினம்

(இ) உழைப்பாளர் தினம்

(ஈ) தியாகிகள் தினம்

Answer:

(இ) உழைப்பாளர் தினம்

7.எங்கு ஜோல் வெரெய்ன் சுங்க ஒன்றியம் உருவாக்கப்பட்டது?

(அ) இங்கிலாந்து

(ஆ) ஜெர்மனி

(இ) பிரான்ஸ்

(ஈ) அமெரிக்கா

Answer:

(ஆ) ஜெர்மனி

8.பிரான்சில் முதல் மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்தவர் யார்?

(அ) லூயி ரெனால்ட்

(ஆ) ஆர்மாண்ட் பீயூகாட்

(இ) தாமஸ் ஆல்வா எடிசன்

(ஈ) மெக் ஆடம்

Answer:

(ஆ) ஆர்மாண்ட் பீயூகாட்

9.எக்கண்டுபிடிப்பு பருத்தியிலிருந்து கொட்டைகளைப் பிரித்தது?

(அ) உருட்டாலைகள்

(ஆ) பஞ்சுக் கடைசல் இயந்திரம்

(இ) ஸ்பின்னிங் மியூல்

(ஈ) இயந்திர நூற்புக் கருவி

Answer:

(ஆ) பஞ்சுக் கடைசல் இயந்திரம்

10.கீழ்க்காண்பனவற்றில் எது இரும்பை உருக்குவதற்காக முற்காலத்தில் பயன்படுத்தப்பட்டது?

(அ) கற்கரி

(ஆ) கரி

(இ) விறகு

(ஈ) காகிதம்

Answer:

(ஆ) கரி

II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்

1.………. இங்கிலாந்தில் ஆடவர்க்கு வாக்குரிமை கோரியது.

Answer:

சாசன இயக்க வாதிகள்

2.………… உலகம் முழுவதும் சாலைகள் அமைக்கப்படும் முறையை மாற்றியமைத்தது.

Answer:

ஜான் லவுடன் மெக் ஆடம்

3.விரைவாகவும் குறைந்த செலவிலும் எஃகை உற்பத்தி செய்யும் முறையை ………. கண்டுபிடித்தார்.

Answer:

ஹென்றி பெஸ்ஸிமர்

4.விஞ்ஞான சோசலிஸத்தை முன்வைத்தவர் ………. ஆவார்.

Answer:

கார்ல் மார்க்ஸ்

5.ஜெர்மனியில் முதல் இருப்புப்பாதை ………. ஆண்டில் இயக்கப்பட்டது

Answer:

டிசம்பர் 1835 ஆம் ஆண்டு

III. சரியான கூற்றைக் கண்டுபிடிக்கவும்

1.(i) இங்கிலாந்துச் சுரங்க முதலாளிகள் சுரங்கங்களுக்குள் நீர்க்கசிவு ஏற்படும் பிரச்சனையை எதிர்கொண்டனர்.

(ii) இவ்வேலையில் மனித உழைப்பை ஈடுபடுத்துவது குறைவான செலவுடையதாக இருக்கும்.

(iii) சுரங்கங்களிலிருந்து நீரை வெளியேற்றும் நீராவி இயந்திரத்தை நியூட்டன் கண்டுபிடித்தார்.

(iv) சுரங்கங்களிலிருந்து நிலக்கரியைப் பெறவேண்டுமானால் நீரை வெளியேற்றியாக வேண்டும்.

அ) i) சரி

ஆ) ii) மற்றும் iii) சரி

இ) i) மற்றும் iv) சரி

ஈ) iii) சரி

Answer:

இ) i) மற்றும் iv) சரி

2.(i) தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காகத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை உருவாக்கிக்கொண்டனர்.

(ii) ஜெர்மனியின் அரசியல் முறை தொழிற்புரட்சிக்குக், குறிப்பிடத்தக்க முக்கியச் சவாலாக அமைந்திருந்தது.

(iii) முதலாளிகளைப் பாதுகாப்பதற்காகக் கார்ல் மார்க்ஸ் சோசலிஸத்தை முன்வைத்தார்.

(iv) ஜெர்மனியில் இயற்கை வளங்கள் ஏதுமில்லை.

அ) i) சரி

ஆ) ii) மற்றும் iii) சரி

இ) i) மற்றும் iv) சரி

ஈ) iii) சரி

Answer:

எதுவும் இல்லை

3.கூற்று : விடுமுறை பெறுவதற்குத் தொழிலாளர் உரிமை பெற்றிருந்தனர்.

காரணம் : பணியாளர்களைப் பாதுகாக்கச் சட்டங்கள் இருந்தன.

அ) கூற்று சரி காரணம் தவறு

ஆ)கூற்று, காரணம் இரண்டுமே தவறு

இ) கூற்று, காரணம் இரண்டுமே சரி

ஈ) கூற்று சரி காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமல்ல

Answer:

ஆ) கூற்று காரணம் இரண்டும் தவறு

4.கூற்று : சிலேட்டர் அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

காரணம் : அவருடைய நூற்பாலையின் நகலாகப் பல நூற்பாலைகள் உருவாயின. அவருடைய தொழில் நுட்பம் பிரபலமானது.

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் ஆ)கூற்று தவறு, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்.

இ) கூற்று, காரணம் இரண்டுமே தவறு

ஈ) கூற்று, காரணம் இரண்டுமே சரி

Answer:

அ) கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்

V. கீழ்க்காணும் கேள்விகளுக்குச் சுருக்கமான விடைளிக்கவும்

1.தொழிற்புரட்சியின்போது இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வாழ்விடங்களின் நிலை எவ்வாறு இருந்தன?

Answer:

  • தொழிலாளர்கள் மிகவும் சிறிய, அழுக்கடைந்த, சுகாதாரமற்ற வீடுகளில் வாழ்ந்தனர். தொழிலாளர்கள் விரும்பினாலும் கூடத் தமது சுற்றப்புறத்தைச் சுத்தப்படுத்தவோ மாற்றவோ அவர்களுக்கு நேரம் இருக்கவில்லை.
  • இதனால் டைஃபாயிடு , காலரா, பெரியம்மை போன்ற நோய்கள் பரவின.

2.இங்கிலாந்தில் நகரமயமாதலுக்கான காரணங்களைக் கூறு.

Answer:

  • தொழிற்புரட்சியால் இங்கிலாந்து உலகின் தொழிற்பட்டறையாக மாறியது. வேளாண் உற்பத்தி பொதுவான வீழ்ச்சி கண்டது. இதனால் மக்கள் கிராமங்களிலிருந்து தொழில் நகரங்களை நோக்கிச் செல்லத் தொடங்கினர்.
  • 1840ல் 20 இலட்சமாக இருந்த லண்டன் மக்கள் தொகை 40 ஆண்டுகளில் 50 இலட்சமாக உயர்ந்தது.
  • மான்செஸ்டர் ஜவுளி உற்பத்தி தொழிலின் தலைநகரமாக மாறியது, ஏராளமான மக்களை ஈர்த்தது. 1771ல் 22 ஆயிரம் மக்களுடன் மந்தமான நகராக இருந்த மான்செஸ்டர் அடுத்த 50 ஆண்டுகளில் 180 ஆயிரம் மக்கள் தொகை கொண்டதாக மாறியது.

3.ஹே மார்க்கெட் படுகொலை பற்றிக் குறிப்பு வரைக.

Answer:

  • நாளொன்றுக்கு 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1886 மே மாதம் 4ஆம் தேதி, சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் அமைதியாகத் தொடங்கியது.
  • காவல் துறை பல சுற்றுகள் துப்பாக்கி சூடு நடத்தி பலரைச் சுட்டுக் கொன்றது. இந்நிகழ்வு “ஹே மார்க்கெட் படுகொலை” என அழைக்கப்படுகிறது.
  • ஹேமார்க்கெட் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மே 1 ஆம் நாள் இன்றளவும் சர்வதேச தொழிலாளர் நாளாகக் (மே தினம்) கடைபிடிக்கப்படுகிறது.
  • மே-1 சர்வதேச தொழிலாளர் நாள் (மே தினம்)

4.லூயி ரெனால்ட் பற்றி நீங்கள் அறிந்தது என்ன?

Answer:

  • 1898 இல் லூயி ரெனால்ட் என்பவர் நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கினார்.

ரெனால்ட்:

  • (ரெனால்ட் சகோதரர்கள் நிறுவனம்) தனது நிறுவனத்தின் மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்களைத் தயாரித்தார்.

5.தொழிற்புரட்சியின் இரு முக்கிய விளைவுகளைக் கோடிட்டுக் காட்டுக.

Answer:

  • இங்கிலாந்து நாட்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சி வணிக விரிவாக்கம், உணவு உற்பத்தி அதிகரிப்பு, ஆலைத் தொழிலாளர்கள் எனும் ஒரு புதிய வர்க்கம் உருவாதல், நகரமயமாக்கம் ஆகிய வளர்ச்சிப் போக்குகளுக்கு இட்டுச்சென்றது.
  • புதிய நகரங்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி, அமைப்பாகத் திரண்ட தொழிலாளர் இயக்கம், தொழிலாளர்களுக்கு வாக்குரிமை கோருதல், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் பணி நிலைமைகளை முறைப்படுத்தக் கோருதல் ஆகிய சமூகநிலைகள் அரசியலில் ஒரு புதிய சக்தியை உருவாக்கின.

VI. விரிவாக விடையளிக்கவும்

1.அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி நடைபெற்றதற்கான காரணங்களை வரிசைப்படுத்துக.

Answer:

அமெரிக்காவில் இரண்டாவது தொழிற்புரட்சி :

உடலுழைப்பிலிருந்து தொழில்நுட்பம், இயந்திரம் சார்ந்த உற்பத்திக்கு மாறுதல்:

  • இங்கிலாந்தின் சாமுவேல் சிலேட்டர் ஓர் ஜவுளி ஆலையை நிர்வாகிக்கும் அளவுக்கு அனுபவம் பெற்றிருந்தார். புதிய தொழில் நுட்பங்களால் அமெரிக்கர்களின் ஆர்வத்தை கேள்விபட்டு 1789ல் அமெரிக்காவின் நியூயார்க்கில் சட்டவிரோதமாகக் குடியேறினார்.
  • ரோட்ஸ் தீவின் மோசஸ் பிரேளன் ஜவுளி ஆலையில் வேலைவாய்ப்பு பெற்று 1793ல் ஆலையை இயக்க
  • வைத்தார். அமெரிக்க நாடுகளில் நீராற்றலின் மூலம் இயங்கிய முதல் ஜவுளி ஆலை இதுவே. சிலேட்டரின் தொழில் நுட்பம் மேலும் மேலும் புகழடைந்து பல தொழில் முனைவோர்கள் துணி ஆலைகள் தொடங்கி வளமடைந்தனர். அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜாக்சன், சிலேட்டரை “அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை” எனப் புகழ்ந்தார்.

புதிய தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகள் உருவாக்குதல்:

  • ராபர்ட் ஃபுல்டன் – நீராவிப் படகுப் போக்குவரத்து (ஹட்சன் நதியில்)
  • சாமுவேல் மோர்ஸ் – தந்தி
  • அலெக்சாண்டர் கிரஹாம் பெல் – தொலைபேசி
  • எலியாஸ் ஹோவே – தையல் இயந்திரம்
  • தாமஸ் ஆல்வா எடிசன் – மின் விளக்கு

கண்டங்களை இணைக்கும் இரயில் பாதை அமைதல் :

  • 1869ல் கண்டங்களை இணைக்கும் முதல் இரயில் பாதை அமைக்கப்பட்டது. இது மக்கள் போக்குவரத்து, சரக்குப் போக்குவரத்து, மூலபபொருடகள எடுத்து வருதல் ஆகியவற்றுக்குப் பயன்பட்டது.

அமெரிக்க அரசின் ஆதரவு:

  • அமெரிக்க அரசு தொழில் வளர்ச்சியை ஆதரித்தது. ரயில் பாதைகள் அமைப்பதற்கான நிலங்கள் வழங்கியது.

ஏகபோகம்:

  • முதல் கனரக எஃகு உற்பத்தி மிகப்பெரிய அளவில் ஆண்ட்ரு கார்னேகி என்பவரால் தொடங்கப்பட்டது. சுரங்கங்கள் உற்பத்தி ஆலைகள், வெப்ப உலைகள், ரயில் பாதைகள், கப்பல் போக்குவரத்து என ஒவ்வொன்றையும் விலைக்கு வாங்கி, எஃகு உற்பத்தியின் ஒவ்வொரு கட்டத்தையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார்,
  • ஒரு கிராமப்புற சமூகமாகத் திகழ்ந்த அமெரிக்கா, நகர்புறப் படுத்தியது.

2.இங்கிலாந்தின் தொழிற்புரட்சியினால் இந்தியாவில் ஏற்பட்டவிளைவுகள் யாவை?

Answer:

இந்தியாவில் தொழிற்புரட்சி தாக்கம்:

  • 18 ஆம் நுற்றாண்டின் இடைபகுதிவரை இந்தியா வேளாண்மைக்காக மட்டுமல்லாமல் அதன் மிகச்சிறந்த உற்பத்திப் பொருள்களுக்காகவும் அறியப்பட்டிருந்தது.
  • ஜான் கே என்பவரால் பறக்கும் நாடா கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 30 ஆண்டுகளில் ஹர்கிரீவ்ஸ், ஆர்க்ரைட், கிராம்ப்டன் ஆகியோரின் கண்டுபிடிப்புகளினால் நூற்பு, நெசவுத் தொழில் ஆகியன பெரும் வளர்ச்சியடைந்தன. இதனால் இங்கிலாந்தில் குவிக்கப்பட்ட இந்தியப் பருத்தி இழைத் துணிகளுக்கும் பட்டு ஆடைகளுக்கும் தடைவிதித்தும் இங்கிலாந்தில் சட்டம் இயற்றப்பட்டது.
  • வங்கத்து நெசவாளர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாயினர். இங்கிலாந்தின் தொழிற்சாலைகளுக்குத் தேவைப்படும் வணிகப்பயிர்களை மட்டும் சாகுபடி செய்ய வற்புறுத்தினர்.
  • கைத்தறி நெசவு, பருத்தி ஆடைகளுக்கான சந்தை இழப்பால் இந்தியா பண்டைய உற்பத்தித் துறையில் வகித்து வந்திருந்த இடத்தை இழந்து மூலப்பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடாக மட்டுமே மாறியது.
  • டாக்கா மஸ்லின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. கச்சாப் பருத்தி ஏற்றுமதியும் படிப்படியாகச் சரிந்தது.
  • பிரிட்டன் உற்பத்தித் துணிகள் இந்தியச் சந்தைகளில் குறைவான விலைக்கு விற்கப்பட்டதால் இந்திய நெசவாளர்கள் வேலையற்றுத் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து உணவுக்கும் வழியற்றவர்களாயினர். பல லட்சம் மக்கள் பஞ்சத்தால் மடிந்தனர், பஞ்சத்தால் சாக விரும்பாத லட்சக்கணக்கானோர் (விவசாயிகள், கைவினைஞர்) தாய்நாட்டை விட்டு வெளியேறி, பிரிட்டிஷ் காலனி நாடுகளின் மலைத்தோட்டங்களில், மோசமான சூழல்களில் அடிமைகளாய், ஒப்பந்தக் கூலிகளாய் வாழ நேர்ந்தது.

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. தொழிற் புரட்சியின் சாதக, பாதக அம்சங்கள் குறித்து ஒரு பேச்சுப் போட்டி நடத்துக.

2. துணி இழைகள் வடிவமைப்புகள் ஆகியவை இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இடங்கள் பற்றிப் பட்டியல் தயார் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button