9th Social Guide TM,

9th Social Science Guide மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம்

9th Social Science Guide மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் Text Book Back Questions and Answers

Lesson 1 மனிதப் பரிணாம வளர்ச்சியும் சமூகமும்: வரலாற்றுக்கு முந்தைய காலம் Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்வு செய்க

1.மனிதர்களுடன் மரபணுவியல் நோக்கில் மிகவும் நெருக்கமாக இருப்பது

அ) கொரில்லா

ஆ) சிம்பன்ஸி

இ) உராங் உட்டான்

ஈ) பெருங்குரங்கு

விடை:

ஆ) சிம்பன்ஸி

2.வேளாண்மை மற்றும் விலங்குகளைப் பழக்கப்படுத்துதல் தொடங்கிய காலகட்டம்

அ) பழைய கற்காலம்

ஆ) இடைக்கற்காலம்

இ) புதிய கற்காலம்

ஈ) பெருங்கற்காலம்

விடை:

இ) புதிய கற்காலம்

 

3.பரிணாம வளர்ச்சி வரிசையில் நவீன மனிதனின் நேரடி முன்னோர் ____ ஆவர்.

அ) ஹோமோ ஹேபிலிஸ்

ஆ) ஹோமோ எரக்டஸ்

இ) ஹோமோ சேபியன்ஸ்

ஈ) நியாண்டர்தால் மனிதன்

விடை:

இ) ஹோமோ சேபியன்ஸ்

4.எகிப்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மற்றும் ஈராக் ஆகியவை அடங்கிய பகுதி ______ எனப்படுகிறது

அ) கிரேட் ரிஃப்ட் பள்ளத்தாக்கு

ஆ) பிறைநிலப் பகுதி

இ) ஸோலோ ஆறு

ஈ) நியாண்டர் பள்ளத்தாக்கு

விடை:

ஆ) பிறைநிலப்பகுதி

5.சர் இராபர்ட் புரூஸ் ஃபூட் என்ற இங்கிலாந்து நிலவியளாலர் சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் _________ கருவிகளை முதன்முறையாக கண்டுபிடித்தார்.

அ) நுண்கற்காலம்

ஆ) பழங்கற்காலம்

இ) இடைக் கற்காலம்

ஈ) புதிய கற்காலம்

விடை:

ஆ) பழங்கற்காலம்

6.i) எழுத்து தோன்றுவதற்கு முந்தைய காலம் வரலாற்றுக்கு முந்தையதாகும்.

ii) வரலாற்றுக்கு முந்தைய கால மக்கள் மொழியை வளர்த்தெடுத்தார்கள்; அழகான ஓவியங்களையும் கலைப்பொருட்களையும் உருவாக்கினார்கள்.

iii) வரலாற்றுக்கு முந்தைய காலச் சமூகங்கள் படிப்பறிவு பெற்றிருந்ததாகக் கருதப்படுகின்றன,

iv) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டம் பழங்காலம் என்று அழைக்கப்படுகிறது.

அ) i) சரி

ஆ) i) மற்றும்

ii) சரி

இ) i) மற்றும்

iv) சரி

ஈ) ii) மற்றும்

iii) சரி

விடை

இ) i) மற்றும் iv) சரி

 

7.i) செல்ட் எனப்பட்ட மெருகேற்றப்பட்ட கற்கோடரிகளைப் புதிய கற்கால மக்கள் பயன்படுத்தினார்கள்

ii) புதிய கற்காலக் கிராமம் குறித்த சான்று சென்னை மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காணப்படுகிறது.

iii) புதிய கற்காலத்தைத் தொடர்ந்து வந்த பண்பாட்டுக்காலம் பழங்கற் காலம் எனப்படுகிறது.

iv) விலங்குகளை வளர்த்தல், பயிர் செய்தல் ஆகியவை நடந்த காலகட்டம் இடைக்கற்காலம் எனப்படுகிறது.

அ) i) சரி

ஆ) ii) சரி

இ) ii) மற்றும்

iii) சரி

ஈ) iv) சரி

விடை:

அ) i) சரி

8.கூற்று : தமிழகத்தின் ஆறுகள், குளங்கள் அருகே இடைக் கற்கால வாழ்விடங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காரணம் : நீர்ப்பாசன மேலாண்மை இடைக் கற்காலத்தில் வளர்ச்சியடைந்து இருந்தது.

அ) கூற்றும் காரணமும் சரி; கூற்றைக் காரணம் சரியாக விளக்குகிறது.

ஆ) கூற்றும் காரணமும் சரி; ஆனால் கூற்றைக் காரணம் சரியாக விளக்கவில்லை.

இ) கூற்று சரி; காரணம் தவறு,

ஈ) கூற்றும் காரணமும் தவறானவை.

விடை:

ஈ) கூற்றும் காரணமும் தவறானவை

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1.கைகோடரிகளும் வெட்டுக்கருவிகளும் _____ பண்பாட்டைச் சேர்ந்த முக்கியமான கருவிவகைகளாகும்.

விடை:கீழ் பழங்கற்கால

2.கற்கருவிகளை உருவாக்குவதற்குத் தேவையான வழிமுறைகளும் நுட்பமும் ______ தொழில் நுட்பம் என அழைக்கப்படுகின்றன.

விடை:கற்கருவி

3.பழங்கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட காலம் _____ எனப்படும்.

விடை:இடைக்காலம்

III. சரியான கூற்றைத் தேர்வு செய்க

1.அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்’ என்ற கருத்து உதவுகிறது.

ஆ) ‘உயிர்களின் தோற்றம் குறித்து’ என்ற நூலை ஹெர்பர்ட் ஸ்பென்சர் பதிப்பித்தார்.

இ) உயிரியல் பரிணாம வளர்ச்சி குறித்த டார்வின் கோட்பாடு இயற்கைத்தேர்வு என்ற வழிமுறையுடன் தொடர்பு உடையது.

ஈ) கல் தொழில்நுட்பம் குறித்து ஆராய்வது நிலவியல் ஆகும்

விடை:

அ) மனிதர்களின் தோற்றத்தை அறிவியல் நோக்கில் புரிந்து கொள்ள தகுதியுள்ளது தப்பிப்பிழைக்கும்’ என்ற கருத்து உதவுகிறது.

 2.அ) குரங்கினங்களில் உராங் உட்டான் மனித மரபுக்கு மிக நெருக்கமான குரங்கினமாகும்.

ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

இ) செதிலை கருவிகள் செய்ய பயன்படுத்த முடியாது.

ஈ) சிறு செதில்கள் தயாரிக்கப் பயன்படும் மூலக்கல் அச்சூலியன் எனப்படும்.

விடை:

ஆ) மனிதர்களின் முன்னோர்களை ஹோமினின் என்கிறோம், அவர்களின் தோற்றம் குறித்த சான்றுகள் ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன.

V. சுருக்கமான விடை தருக

1.ஊகக் காலம் மனிதர்களைத் தன்னுணர்வும் , அறிவும் உள்ளவர்களாக எப்படி மாற்றியது?

விடை:

  • பரிணாம வளர்ச்சிப் போக்கில் மனிதர்கள் இயற்கை, தம்மைச் சுற்றியுள்ள உயிரினங்கள் மற்றும் உலகம் குறித்துச் சிந்திக்கவும், கேள்வி எழுப்பவும் தொடங்கினர்.
  • இதன் மூலம் மனிதர்கள் உணர்தல் நிலையையும் அறிவாற்றலையும் கொண்டவர்களாக மாறினார்கள்.

2.வரலாற்றுக்கு முந்தைய காலத் தமிழக மக்களின் வாழ்வில் கால்நடை வளர்த்தல் ஏற்படுத்திய தாக்கம் பற்றி குறிப்பு தருக.

விடை:

  • இரும்புக்கால மக்கள் வேளாண்மை மேற்கொண்டு, ஆடு, மாடுகளையும் வளர்த்தார்கள்.
  • சில குழுக்கள் வேட்டையாடிக்கொண்டும், உணவு சேகரித்துக் கொண்டும் இருந்தநிலையில், இவர்கள் பாசன நிர்வாகத்தை மேம்படுத்தினர். திணையும், நெல்லும் பயிரிட்டனர்.
  • பானைகள் செய்தார்கள். நிரந்தரமான இடங்களில் வசித்தார்கள். கலைகள் பல வளர்ந்தனர்.

 3.பெருங்கற்காலத்தில் இறந்தோரைப் புதைக்கும் வழக்கத்தின் வகைகளைக் கூறு

விடை:

  • டோல்மென் எனப்படும் கற்திட்டை.
  • சிஸ்ட் எனப்படும் கல்லறைகள்
  • மென்ஹிர் எனப்படும் நினைவுச்சின்ன குத்துக்கல், தாழி, பாறைக் குடைவு குகைகள்.
  • சார்க்கோபேகஸ் எனப்படும் ஈமத்தொட்டிகள்.

4.கருவி செய்வதில் கீழ்ப் பழைய கற்கால மக்களிடமிருந்த தொழில்நுட்பத்தைத் திறனாய்வு செய்க.

விடை:

  • கீழ்ப் பழைய கற்கால மக்கள் தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக இருமுகக் கருவிகளான கைக்கோடாரி, வெட்டுக்கத்தி போன்ற பல கருவிகளைக் செய்தார்கள்.
  • இவை சமபங்கு உருவ அமைப்பை (Symmetry) பெற்றுள்ளன. மனித மூதாதையரின் அறிவுணர் ஆற்றலை வெளிப்படுத்துகின்றன.
  • பெரிய கற்களை செதில்களாகக் சீவி பல கருவிகளை வடிவமைத்தார்கள்.

VI. விரிவான விடையளிக்கவும்.

1.விவசாயம், பானை செய்தல், உலோகக் கருவிகள் செய்தல் ஆகிய துறைகளில் நிகழ்ந்த வளர்ச்சி பெருங்கற்காலத்தில் ஏற்பட்ட மிக முக்கியமான மாற்றமாகும் – உறுதிப்படுத்தவும்.

விவசாயம்:

  • பெருங்கற்கால (இரும்புகால) மக்கள் வேளாண்மையில் ஈடுபட்டபொழுது திணையும் நெல்லும் பயிரிடப்பட்டன.
  • நதிகள், குளங்களுக்கு அருகே பெருங்கற்கால இடங்கள் அமைந்ததால் பாசன நிர்வாகம் மேம்பட்டது. பாசன தொழில் நுட்பம் வளர்ந்தது.
  • ஈமச் சின்னங்களுக்குள நெல்லை வைத்துப் புதைத்தார்கள்.

சான்றுகள்: ஆதிச்சநல்லூர், பொருந்தல்.

பானை செய்தல்:

  • கறுப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டங்கள் இக்காலத்தில் பயன்படுத்தப்பட்டன. உள்ளே கறுப்பாகவும், வெளியே சிவப்பாகவும், பளபளப்பாகவும் இம் மண்பாண்டங்கள் காணப்பட்டன.
  • இப்பாண்டங்கள் சமையல், பொருள்கள் சேமிப்பு மற்றும் சாப்பிடுவதற்கு பயன்பட்டன. உலோகக்கருவிகள்
  • பெருங்கற்கால இரும்புக் கருவிகள் வேளாண்மை, வேட்டையாடுதல், உணவு சேகரித்தல் மற்றும் போர்களில் பயன்படுத்தப்பட்டன. வாள், குறுவாள், கோடவரி, உளி, விளக்கு, மக்காலி ஆகியவை கிடைத்துள்ளன.
  • வெண்கலக் கிண்ணங்கள், கலங்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, மணிகள் ஆகியவையும் கிடைத்துள்ளன.
  • இக்கால கல்லறைகளில் ஈமப்பொருட்களாக இரும்புப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

2.மனிதர்களின் வரலாறு பூமியின் வரலாற்றுடன் நெருங்கிய தொடர்பு உடையது – தெளிவுப்படுத்துக

விடை:

  • புவியின் மேலடுக்குகளில் வரலாற்றுக் கால கட்டங்கள் குறித்த நிலவியல், தொல்லியல், உயிரியல் பதிவுகள் காணப்படுகின்றன. குறிப்பாக மனித மூதாதையரின் எலும்பு புதை படிவங்கள் புதைந்துள்ளன.
  • மண் மற்றும் பாறை அடுக்குகள், தொல்மானுடவியல் அறிஞர்கள் மற்றும் தொல்லியல் அறிஞர்களால் அகழ்ந்து, சான்றுகள் சேகரிக்கப்படுகின்றன.
  • அறிவியல் பூர்வமாக கணிக்கப்படும் புதை படிவங்கள் மற்றும் மண்ணடுக்குகளின் காலம் மனிதர்களின் பரிணாமம், தொல் பழங்காலம் பற்றி அறிய உதவுகிறது.
  • நிலவியல் ஆய்வாளர்களால் புவியின் நீண்ட நெடிய வரலாறு நெடுங்காலம் (Era), காலம் (Period), ஊழி (Epoch), என பிரிக்கப்படுகிறது.
  • முந்தைய தொல்லுயிரூழி – பல செல் உயிரினங்கள்
  • பழந்தொல்லுயிரூழி – மீன்கள், ஊர்வன, தாவரங்கள்
  • இடைத் தொல்லுயிரூழி – டைனோஸர்
  • பாலூட்டிகள் காலம் – ஆஸ்ட்ரோலாபித்திஸைன்கள் (குரங்கினம்)
  • (இக் குரங்கினத்திலிருந்துதான் நவீன மனித இனம் தோன்றியது)

VII. மாணவர் செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. உலக வரைபடத்தில் வரலாற்றுக்கு முந்தைய கால நாகரிகம் நிலவிய பகுதிகளைக் குறிக்கவும்

2. வரலாற்றுக்கு முந்தைய காலம் தமிழ்நாட்டில் நிலவிய இடங்கள் என்ற தலைப்பில் ஒரு கண்காட்சியை அமைக்கவும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button