8th Tamil Guide,Uncategorized

8th Tamil Unit 7.2 – விடுதலைத் திருநாள் Answer

8th Tamil Unit 7.2 விடுதலைத் திருநாள் book back question and answer

Tamilnadu state board 8th Tamil unit 7 book back question and answer ,important question and answer guide, notes term 1,2,3 pdf download

  • 8th Tamil – விடுதலைத் திருநாள்
கற்பவை கற்றபின்

Question 1.

நீங்கள் விரும்பும் விழா ஒன்றனைப் பற்றி ஒரு பத்தி அளவில் எழுதுக.

Answer:

நான் விரும்பும் விழா குடியரசு நாள் விழா.

  • குடியரசு நாள் அன்று பள்ளியில் காலையில் கொடியேற்றுவார்கள். நான் காலையில் பள்ளிக்குச் செல்வேன். பள்ளியில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பேன். விழாத் தலைவர், பள்ளி முதல்வர் மற்றும் என் நண்பர்கள் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஆற்றும் உரையைக் கேட்பேன்.
  • பிறகு விழா முடிவில் நாட்டுப்பண் பாடியதும் இனிப்புகள் வழங்கப்படும். இனிப்புகளைப் பெற்றுக் கெண்டு வீட்டிற்குச் செல்வேன். அங்கு தொலைகாட்சியில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதையும் மெரினா கடற்கரை சாலையில் காவல்துறையினரின் அணிவகுப்பையும் கலை நிகழ்ச்சிகளையும் கண்டு களிப்பேன்.
  • அந்நன்னாளில் வீரதீர செயல்கள் செய்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்நிகழ்ச்சியை பார்த்துவிட்டு அன்று மாலை மெரினா கடற்கரைக்குச் சென்று நீரில் விளையாடிவிட்டு வருவேன். இக்காரணங்களால் எனக்குக் குடியரசு நாள் மிகவும் பிடிக்கும்.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.

வானில் முழுநிலவு அழகாகத் ……………… அளித்தது.

அ) தயவு

ஆ) தரிசனம்

இ) துணிவு

ஈ) தயக்கம்

Answer:

ஆ) தரிசனம்

 

Question 2.

இந்த ……………. முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.

அ) வையம்

ஆ) வானம்

இ) ஆழி

ஈ) கானகம்

Answer:

அ) வையம்

Question 3.

‘சீவனில்லாமல் ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….

அ) சீவ + நில்லாமல்

ஆ) சீவன் + நில்லாமல்

இ) சீவன் + இல்லாமல்

ஈ) சீவ + இல்லாமல்

Answer:

இ) சீவன் + இல்லாமல்

Question 4.

‘விலங்கொடித்து’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….

அ) விலம் + கொடித்து

ஆ) விலம் + ஒடித்து

இ) விலன் + ஒடித்து

ஈ) விலங்கு + ஒடித்து

Answer:

ஈ) விலங்கு + ஒடித்து

Question 5.

காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………….

அ) காட்டை எரித்து

ஆ) காட்டையெரித்து

இ) காடுஎரித்து

ஈ) காடுயெரித்து

Answer:

ஆ) காட்டையெரித்து

Question 6.

இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………

அ) இதந்தரும்

ஆ) இதம்தரும்

இ) இதத்தரும்

ஈ) இதைத்தரும்

Answer:

அ) இதந்தரும்

குறுவினா

Question 1.

பகத்சிங் கண்ட கனவு யாது?

Answer:

  • இந்தியா அந்நியரின் ஆட்சியிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்பதே பகத்சிங் கண்ட கனவு ஆகும்.

Question 2.

இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?

Answer:

  • முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் ஆட்சியை இருண்ட ஆட்சி என மீரா குறிப்பிடுகிறார்.

சிறுவினா

Question 1.

இந்தியத்தாய் எவ்வாறு காட்சியளிக்கிறாள்?

Answer:

  • (i) முந்நூறு ஆண்டுகள் அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது. உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டினோம்.
  • (ii) அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத்தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளிக்கின்றாள்.

சிந்தனை வினா

Question 1.

நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாளை எவ்வாறு கொண்டாடலாம்?

Answer:

  • (i) நாட்டுப்பற்றை வளர்க்கும் வகையில் விடுதலை நாள் விழாவில் பலகலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த வேண்டும்.
  • (ii) நம்மைப் பெற்றெடுத்த தாயை எவ்வாறு போற்றுவோமோ, அதேபோல் நம் தாய்நாட்டின் பெருமையையும் பழமையையும் மாணவர்கள் அறியும்படி உரையாற்ற வேண்டும்.
  • (iii) நாம் அடிமைகளாய் இருந்ததைக் கூறி அடிமைத்தளையை நீக்கியவர்களின் தியாகத்தைக் கூறும் வகையில் சிறு நாடகம் நடத்த வேண்டும்.
  • (iv) சாதி, மத பேதங்களினால் நாம் சண்டை சச்சரவுகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.
  • (v) நாட்டின் பாரம்பரியம் கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும். தேசிய சின்னங்கள், தேசியக் கொடி, தேசியப்பாடல் ஆகியவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டும். நாட்டிற்குச் சேவை செய்ய எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஊர்க்காவல் படை, மாணவர் தேசியப்படை ஆகியவற்றில் பங்காற்றல் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு விடுதலை நாளைக் கொண்டாடலாம்.

கூடுதல் வினாக்கள்

நிரப்புக :

1. கவிஞர் மீராவின் இயற்பெயர் ………………………

2. மீரா அவர்கள் நடத்திய இதழ் ……………………….

3. விடுதலைத் திருநாள் என்ற பாடல் …………………… என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

4. தாய்நாட்டைத் ………………………. வணங்குவோம்.

5. பகத்சிங்கிற்கு சதி வழக்கில் …………………… விதிக்கப்பட்டது.

Answer:

1. மீ. இராசேந்திரன்

2. அன்னம் விடு தூது

3. கோடையும் வசந்தமும்

4. தமிழால்

5. தூக்குத்தண்டனை

குறுவினா : Creative 2 marks

Question 1.

மீரா – குறிப்பு வரைக.

Answer:

  • (i) கவிஞர் மீரா அவர்களின் இயற்பெயர் மீ. இராசேந்திரன். இவர் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர்.
  • (ii) அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர்.
  • (iii) ஊசிகள், குக்கூ , மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

Question 2.

அந்நியர் ஆட்சியில் மக்கள் எவ்வாறு இருந்தனர்?

Answer:

  • முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சியில் மக்கள் உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்தனர்.

நெடுவினா : 6 Marks

Question 1.

‘விடுதலைத் திருநாள்’ பாடல் மூலம் கவிஞர் கூறியவற்றைத் தொகுத்து எழுதுக.

Answer:

முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது என்பதைக் கூறும் நாள் இன்று. உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டிய நாள் இன்று.

அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத் தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்த நாள் இன்று.

சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கண்ணில் கனவுகண்ட இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் இன்று. பகைமை என்னும் முள்காட்டினை அழித்து, அங்கு விளைந்த மூங்கிலைப் புரட்சி என்னும் புல்லாங்குழல் ஆக்கி மூச்சுக்காற்றால் பூபாள இசை பாடும் இனிய நாள் இன்று.

இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த நம் தாய்நாட்டை தமிழால் வணங்குவோம்.

பாடல்

samacheer Guide
samacheer Guide

 

பொருள் தருக

  1. சீவன் – உயிர்
  2. சத்தியம் – உண்மை
  3.  ஆனந்த தரிசனம் – மகிழ்வான காட்சி
  4.  வையம் – உலகம்
  5.  சபதம் – சூளுரை
  6.  மோகித்து – விரும்பி

பாடலின் பொருள்

  • முந்நூறு ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்ட அரக்கராகிய அந்நியரின் இருண்ட ஆட்சி முடிந்தது என்பதைக் கூறும் நாள் இன்று. உயிரற்ற பிணங்களைப் போலக் கிடந்த நாட்டு மக்கள் அனைவரையும் பற்றியிருந்த அறியாமை என்னும் உறக்கத்தை ஓட ஓட விரட்டிய நாள் இன்று.
  • அடிமையாய்த் தவித்துக் கொண்டிருந்த இந்தியத் தாய் சினந்து எழுந்து தன் கைவிலங்கை உடைத்துப் பகைவரை அழித்து, அவிழ்ந்த கூந்தலை முடித்து நெற்றியில் திலகமிட்டு, இந்தியருக்கு மகிழ்வான காட்சியை அளித்த நாள் இன்று.
  • சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தன் மனக்கண்ணில் கனவுகண்ட இந்தியாவின் விடியல் தோன்றிய நாள் இன்று. பகைமை என்னும் முள்காட்டினை அழித்து, அங்கு விளைந்த மூங்கிலைப் புரட்சி என்னும் புல்லாங்குழல் ஆக்கி மூச்சுக்காற்றால் பூபாள இசை பாடும் இனிய நாள் இன்று.
  • இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த நம் தாய்நாட்டை தமிழால் வணங்குவோம்.

மீரா ஆசிரியர் குறிப்பு

  • மீ. இராசேந்திரன் என்னும் இயற்பெயரை உடைய மீரா கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். அன்னம் விடு தூது என்னும் இதழை நடத்தியவர். ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கோடையும் வசந்தமும் என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button