Educational NewsTeachers News

4,000 பேராசிரியர்கள் விரைவில் நியமனம்: பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்!

4,000 பேராசிரியர்கள் விரைவில் நியமனம்: பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:

4,000 பேராசிரியர்கள் விரைவில் நியமனம்: பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்
4,000 பேராசிரியர்கள் விரைவில் நியமனம்: பேரவையில் அமைச்சர் பொன்முடி தகவல்

உத்திரமேரூர் உறுப்பினர் க.சுந்தர் (திமுக): வாலாஜாபாத் அருகே கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். தற்போது உத்திரமேரூரில் உள்ள கல்லூரியில், தமிழ், ஆங்கிலத்தில் முதுகலை வகுப்புகள், தாவரவியல், விலங்கியலில் இளம் அறிவியல் வகுப்புகள் கூடுதலாக தொடங்க வேண்டும்.

பொன்னேரி உறுப்பினர் துரை சந்திரசேகர் (காங்கிரஸ்):

எனது தொகுதியில் உள்ள கல்லூரியில் பி.காம். உள்ளிட்ட படிப்புகள் கூடுதலாக தொடங்க வேண்டும். உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி: முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, ஒன்றரை ஆண்டுகளில் உயர்கல்வி துறையின் கீழ் 20, அறநிலையத் துறையின் கீழ் 10, கூட்டுறவு துறையின் கீழ் 1 என 31 கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கல்லூரியே இல்லாத தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு முதல்வர் கூறியுள்ளார். எனவே, நிதிநிலைக்கு ஏற்ப கல்லூரிகள் தொடங்கப்படும். புதிய படிப்புகள் தொடங்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. தற்போது 4,000 நிரந்தர பேராசிரியர்களை நியமிக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button