Teachers NewsEducational NewsSchool NewsTime TableToday News
10th, 11th, 12th Public Exam Time Table – முக்கிய அறிவிப்பு!
10th, 11th, 12th Public Exam Time Table - முக்கிய அறிவிப்பு!
10th, 11th, 12th Public Exam Time Table – முக்கிய அறிவிப்பு!
10 11 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணையை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் 2.30 மணி அளவில் வெளியிடுகிறார்.
10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை இன்று வெளியிடப்படுமென பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2022-23ஆம் கல்வியாண்டிற்கான 10. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என்று வெளியிடுகிறார். பொதுவாகவே 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மணவர்களுக்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். தேர்வு முடிவுகள் மே மாத இறுதியில் வெளியிடப்படும்.
அதற்கான கால அட்டவணை முன்கூட்டியே பள்ளிக் கல்வித்துறை சார்பில் வெளியிடப்படும். அதற்கேற்ப மாணவர்களும் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்வர். ஆசிரியர்களும் தங்களது மாணவர்களை தயார்ப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவர்.. அந்தவகையில், இன்று பிற்பகல் 2:30 மணி அளவில் 10ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு கால அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.