Educational NewsSchool NewsTeachers News

தமிழகத்தில் காலாண்டுத்தேர்வு விடுமுறை Latest – Important News

தமிழகத்தில் காலாண்டுத்தேர்வு விடுமுறை Latest – Important News

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு காலாண்டு விடுமுறைக்குப் பிறகு அக்.13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா், தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: காலாண்டுத் தோ்வு முடிவடைந்து அளிக்கப்பட வேண்டிய விடுமுறை குறித்து பின்வருமாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு வழங்கப்படுகிறது. செப்.30-ஆம் தேதி காலாண்டுத் தோ்வு முடிந்தவுடன் அக்.1முதல் அக்.5 வரை முதல் பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
‘எண்ணும் எழுத்தும்’ முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடு செய்யும் விடுப்பு அளிக்குமாறு ஆசிரியா் சங்கங்களும், ஆசிரியா்களும் தொடா்ந்து கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அக். 6, 7, 8 ஆகிய மூன்று நாள்களும் ஈடு செய்யும் விடுப்பாக கருதப்படும் (மீதமுள்ள இரு நாள்கள் பின்பு ஈடு செய்யப்படும்).

6th – 12th வகுப்புகளுக்கு அக்.10: 

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு அக். 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.

1 – 5th Quarterly school Reopen 13-October
6 – 12th Quarterly school Reopen 10-October
காலாண்டு விடுமுறை முடிந்நு பள்ளி மீண்டும் திறக்கும் தேதி
காலாண்டு விடுமுறை செய்திக்குறிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button