Educational NewsTeachers News
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுஊழியர்கள் ஓ பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும் என பலகட்ட போராட்டங்கள் மூலம் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்..கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் அமைந்துள்ள நிதி துறை ஆணையர் அலுவலகம் முன்பு அனைத்து அரசு ஊழியர்கள் ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்தனர்.

அதேபோன்று தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி வரும் மார்ச் 4ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
அதேபோன்று ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் 2003ல் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தில் இணைப்பது குறித்து அனைத்து துறை செயலாளர்களும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில் தமிழக அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடுஅரசு பணியில் 2003 ஆம் ஆண்டு ஆணை பெற்று 2004 இல் சேர்ந்தவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்படாத ஊழியர்களின் விவரங்களை பெற அனைத்து துறை செயலாளர்களுக்கும் நிதித்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் பழைய ஒய்வூதிய திட்டம் அமல்படுத்த ஆலோசனை எதுவும் நடைபெறவில்லை என நிதித்துறை அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஒரு மாசம் 4ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.