பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாலும் ஜிபி முத்துக்கு கிடைத்த அங்கீகாரம் – பிரபல இயக்குனர் பாராட்டு!
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாலும் ஜிபி முத்துக்கு கிடைத்த அங்கீகாரம் – பிரபல இயக்குனர் பாராட்டு!
பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினாலும் ஜிபி முத்துக்கு கிடைத்த அங்கீகாரம் – பிரபல இயக்குனர் பாராட்டு!

விஜய் டிவி #பிக்பாஸ்_சீசன்_6 நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்களில் ஒருவராக களமிறங்கி அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் ஜிபி முத்து. அவர் நிகழ்ச்சியை விட குடும்பம் தான் முக்கியம் என சொல்லி விலகிய நிலையில் அவரை பிரபல இயக்குநர் புகழ்ந்து ட்விட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜிபி முத்து:
பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் வெற்றி பெற்ற ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சி. தமிழ் மொழியில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஆறாவது சீசன் சில வாரங்களுக்கு முன் பிரமாண்டமாய் தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதில் யுடியூப் பிரபலம் ஜிபி முத்துவின் பெயர் இருந்தது. அதனால் அவர் உள்ளே வந்து என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடம் இருந்தது.
இந்நிலையில் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக ஜிபி முத்து களமிறங்கினார். மேலும் வந்த நாளே கமல் அவரை கலாய்க்க அது கூட புரியாமல் அவர் இருந்தது எல்லாம் நகைச்சுவையாக இருந்தது. மேலும் முதல் வார தலைவராக ஜிபி முத்து தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் வாழ்க்கை கதை சொல்லும் டாஸ்க் காரணமாக அவருக்கு குடும்பத்தின் நியாபகம் வந்தது. அதன் காரணமாக அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற முடிவு செய்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேற போவது இவரா? பெண்களிடம் அத்துமீறினால் இதான் கதி!
பிக்பாஸ் பேசியும், கமல் பேசியும் கூட, எனக்கு புகழை விட குழந்தைகள் தான் முக்கியம் என சொல்லி அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் அவரை பாராட்டி பிரபல இயக்குநரான சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் வெற்றி பெற தகுதியான ஒரு போட்டியாளன், அதன் வருமானம் வெகுமானம் யாவற்றையும் பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு தன் மகனுக்காக புகழ் வாய்ந்த சபையில் உலகறிந்த நடிகர் கேட்டும் கேளாமல் #bigbosstamil6 லிருந்து விடைபெற்ற தமிழ்மகன் #GPமுத்து தான் தீபாவளியின் வெற்றி நாயகன்… என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை GP முத்து ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
வெற்றி பெற
தகுதியான
ஒரு போட்டியாளன்,அதன் வருமானம்
வெகுமானம்
யாவற்றையும்
பணிவோடு வேண்டாமென துறந்து விட்டு
தன் மகனுக்காகபுகழ் வாய்ந்த சபையில்
உலகறிந்த நடிகர் கேட்டும்
கேளாமல் #bigbosstamil6 லிருந்து
விடைபெற்ற
தமிழ்மகன்#GPமுத்து தான் தீபாவளியின்
வெற்றி நாயகன் 💐@ikamalhaasan pic.twitter.com/aKDpK8vKQH— Dr.Seenu Ramasamy (@seenuramasamy) October 24, 2022