பள்ளியில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு – குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு!

- பள்ளியில் திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு – குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு!
துப்பாக்கி சூடு:
ரஷ்யாவில் உள்ள நகரில் பள்ளி ஒன்றில் நுழைந்த மர்மநபர் அங்குள்ள குழந்தைகள் உட்பட 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சமீப காலங்களாக உலகின் பல பகுதிகளிலும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது. அதிலும் முக்கியமாக இவர்கள் பள்ளி குழந்தைகளை தான் அதிக அளவில் குறி வைத்து தாக்குகின்றனர். பெரும்பாலானவர்கள் இதில், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாவும் அல்லது தீவிரவாத பிரிவை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். இது போன்ற நிகழ்வுகளை தவிர்ப்பதற்காக வெளிநாடுகளில் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் போதிலும், பாதிப்புகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
இந்நிலையில், ரஷ்யாவில் உள்ள மாஸ்கோவில் இருந்து கிழக்கே 600 மைல் தொலைவில் இருக்கும் இஷெவ்ஸ்கில் என்ற நகரத்தில் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு திடீரென நுழைந்த மர்மநபர் ஒருவர் பள்ளியில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில், அங்கிருந்த 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நபர் இறுதியாக தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அங்கிருந்து மக்களை பாதுகாப்பாக வெளியேற்றினர். காயம் அடைந்தவர்களுக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதேபோல், இதற்கு முன்னதாகவும் ரஷ்யாவில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த துயர சம்பவம் குறித்து ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமலிருக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ள நகரில் பள்ளி ஒன்றில் நுழைந்த மர்மநபர் அங்குள்ள குழந்தைகள் உட்பட 13 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.