இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு – விண்ணப்பம் எழுதுக.
Table of Contents ( இந்த பக்கத்தில் உள்ளது )
8th tamil unit 1 Tamil essay – Naan virumbum kavingar
இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.
அனுப்புநர் :
கவிதா.ம
14, காந்தி தெரு,
கந்தபுரம்,
வேலூர்.
பெறுநர் :
உயர்திரு வட்டாட்சியர் அவர்கள்,
வட்டாட்சியர் அலுவலகம்,
வேலூர்.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள் : இருப்பிடச் சான்று வேண்டி.
வணக்கம். நான் மேலே குறிப்பிட்ட முகவரியில் பத்து ஆண்டுகளாகக் குடும்பத்துடன் இருக்கிறேன். நான் படிக்கும் பள்ளியில் என் இருப்பிடம் பற்றிய விவரத்தைக் கேட்கின்றனர். ஆதலால் நான் இம்முகவரியில்தான் வசிக்கிறேன் என்பதற்கான இருப்பிடச் சான்றிதழ் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி!
இணைப்பு :
1. ‘குடும்ப அட்டை நகல்
இப்படிக்கு,
தங்கள் உண்மையுள்ள
கவிதா ம.
உறைமேல் முகவரி,
அஞ்சல் தலை
பெறுநர்
உயர்திரு வட்டாட்சியர் அலுவலகம்,
வட்டாட்சியர் அலுவலகம்,
வேலூர்.